TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

June 11 , 2021 1173 days 627 0
  • 3  முதல் 17 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு கொரோனாவாக் எனும் தடுப்பூசியினை வழங்குவதற்காக வேண்டி அதன் அவசரகாலப் பயன்பாட்டிற்கு அரசு ஒப்புதல் அளித்துள்ளதாக சீனா அறிவித்துள்ளது.
    • கொரோனாவாக் தடுப்பூசியானது பெய்ஜிங்கிலுள்ள சைனோவாக் பயோடெக் எனும் மருந்து உற்பத்தி நிறுவனத்தினால் தயாரிக்கப்படும் கோவிட்-19 தடுப்பு மருந்தாகும்.
  • இந்தியத் தலைமை மருந்து கட்டுப்பாட்டு வாரியமானது இந்தியாவில் ஸ்புட்நிக் கோவிட்-19 தடுப்பு மருந்தினை உற்பத்தி செய்வதற்கு சீரம் நிறுவனத்திற்கு அனுமதி வழங்கியுள்ளது.
    • பூனாவிலுள்ள சீரம் நிறுவனமானது ரஷ்யாவின் மாஸ்கோவிலுள்ள காமேலயா தொற்று நோயியல் மற்றும் நுண்ணுயிரியல், ஆராய்ச்சி நிறுவனத்துடன் இணைந்து உரிமம் பெற்ற தனது ஹடாப்சார் ஆய்வகத்தில் ஸ்புட்நிக் V தடுப்பு மருந்தினை உருவாக்கி வருகிறது.
  • மத்திய அரசானது அனுப் சந்திர பாண்டே என்பவரைத் தேர்தல் ஆணையராக நியமித்துள்ளது.
    • தலைமை தேர்தல் ஆணையர் சுசீல் சந்திரா மற்றும் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் ஆகியோர் தேர்தல் ஆணையத்தின் மற்ற இரு உறுப்பினர்களாவர்.
  • எல் சால்வெடார் நாடானது பிட்காயினை தன்னுடைய அதிகாரப் பூர்வமான பணமாக அங்கீகரித்துள்ள உலகின் முதல் நாடாக உருவெடுத்துள்ளது.
    • இந்த சங்கேத இணையப் பணத்தை சட்டமுறையாக்குவதற்கான ஒரு முன்மொழிதலானது அந்நாட்டு அதிபர் நயிப் புக்கெலே அவர்களால் முன் வைக்கப்பட்டது.
  • ஐக்கிய நாடுகள் பொதுச் சபையானது அதன் நடப்பு பொதுச் செயலாளரான  அன்டோனியோ குட்ரெஸ் அவர்களை அதன் பொதுச் செயலாளர் பொறுப்பிற்கு மீண்டும் (5 ஆண்டுகள்) பரிந்துரைத்துள்ளது.
    • இவர் 2022 ஆம் ஆண்டு ஜனவரி 01 ஆம் தேதி முதல் மற்றுமொரு ஐந்தாண்டுகளுக்கு ஐக்கிய நாடுகளின் பொதுச் செயலாளராகப் பணியாற்ற உள்ள நபராவார்.
  • 2021 ஆம் ஆண்டு P4G சியோல் உச்சி மாநாடானது இந்த பத்தாண்டு கால நடவடிக்கையில் P4G தளத்தினை (Partnering for Green Growth and the Global Goals 2030 - பசுமை வளர்ச்சி மற்றும் உலகளாவிய இலக்குகள் கூட்டமைப்பு 2030) ஒரு சிறந்த மற்றும் பசுமையான வழங்கீட்டு நடைமுறையாக நிலைநிறுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
    • 2021 ஆம் ஆண்டு P4G சியோல் உச்சிமாநாட்டின் கருத்துரு, “கார்பன் நடுநிலைத் தன்மையை நோக்கிய உள்ளார்ந்த பசுமை மீள்வுஎன்பதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்