TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

June 12 , 2021 1172 days 551 0
  • வேயன் என்ற கிராமமானது தனது கிராமத்தைச் சேர்ந்த 18 வயதுக்கு மேல் உள்ள அனைவருக்கும் கோவிட்-19 தடுப்பு மருந்தினை வழங்கிய ஒரு முதல் இந்தியக்  கிராமமாக உருவெடுத்துள்ளது.
    • இது ஜம்மு & காஷ்மீரின் பந்திப்போரா மாவட்டத்தில் 18 வயதிற்கு மேல் 362 நபர்கள் என்ற மக்கள்தொகை கொண்ட ஒரு தொலைதூர கிராமமாகும்.
  • ரஷ்ய நாடானது ரேடாருக்குப் புலப்படாத வகையிலான தொழில்நுட்பத்தினாலான தனது முதலாவது கடற்படைக் கப்பலைக் கட்டமைத்து வருகிறது.
    • ரேடாருக்குப் புலப்படாத தொழில்நுட்பமானது (Stealth technology) ஒரு கப்பலைக் கண்டறிவதை மிகவும் கடினமானதாக்கும்.
  • சென்ட்ரல் பாங்க் ஆஃப் இந்தியா மற்றும் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி ஆகிய வங்கிகளிலுள்ள இந்திய அரசின் பங்குகளை விலக்கி கொள்வதற்கு நிதி ஆயோக் அமைப்பானது பரிந்துரை செய்துள்ளது.
    • இது இந்தியாவின் மத்திய நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்ட தனியார் மயமாக்கலுக்கான முன்னெடுப்பின் ஓர் அங்கமாகும்.
  • இந்திய நாடானது ஐக்கிய நாடுகளின் பொருளாதார மற்றும் சமூக மன்றத்தின் ஒரு உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.
    • 2022 முதல் 2024 ஆம் ஆண்டு வரை இந்தியா இந்தப் பொறுப்பினை வகிக்கும்

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்