TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

June 14 , 2021 1170 days 560 0
  • சமீபத்தில் நடந்து முடிந்த அரேபிய-இந்திய ஆற்றல் மன்றத்தில் ஆற்றல் ஒத்துழைப்பு மற்றும் பிராந்தியங்களுக்கிடையேயான ஆற்றல் வர்த்தகம் போன்றவற்றை மேம்படுத்துதல் ஆகியவை குறித்து விவாதிக்கப்பட்டது.
    • இந்த நிகழ்வானது மொரோக்கோ ராஜ்ஜியம் மற்றும் இந்தியா ஆகியவற்றின் இணைத் தலைமையின் கீழ் காணொலி மூலம் நடைபெற்றது.
  • ஜுன் 10 அன்று வருடாந்திர வளைய சூரிய கிரகணம் உலகின் பல பகுதிகளில் தென்பட்டது.
    • நிலவினைச் சுற்றி நெருப்பு வளையம் போன்று உருவான இந்த சூரிய கிரகணமானது மிக அரிதானதாகும்.
  • ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் தலைவர் பொறுப்பை ஏற்க உள்ள மாலத்தீவின் வெளியுறவுத்துறை அமைச்சர் அப்துல்லா சாஹீத் அவர்கள் இந்திய வெளியுறவுப் பணி அதிகாரியான K. நாகராஜ் நாயுடு அவர்களை செஃப் தே கேபினட் (chef de cabinet) அல்லது தனிச் செயலர் என்ற ஒரு பொறுப்பிற்கு நியமித்துள்ளார்.
    • இவருடைய பதவிக் காலம் ஒரு வருடமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
  • சமீபத்திய அரசு உத்தரவின்படி, லடாக் ஒன்றியப் பிரதேசத்தின் வேலைவாய்ப்புகள் அனைத்தும் லடாக்கின் மக்களுக்கு மட்டுமே வழங்கப்படும்.
    • அதன் துணை நிலை ஆளுநர் R.K. மாத்தூர் அவர்கள் இந்த உத்தரவினை அறிவித்தார்.
  • இந்தியன் ஆயில் நிறுவனத்தின் குஜராத் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையமானது தூய எரிபொருள் முன்னெடுப்பின் ஒரு அம்சமாக இந்தியாவின் முதலாவது ஹைட்ரஜன் வழங்கீட்டு (விநியோக) வசதியை அமல்படுத்த உள்ளது.
    • இந்த வசதியானது வடோதரா மற்றும் கேவடியா/ சபர்மதி ஆசிரமம் ஆகியவற்றுக்கு இடையே இயங்கும் ஹைட்ரஜன் பேருந்துகளுக்கு எரிபொருள் வழங்கும் நோக்கில் தொடங்கப் பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்