TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

June 15 , 2021 1169 days 523 0
  • 2020-21 ஆம் ஆண்டில் இந்தியாவின் வேளாண் மற்றும் வேளாண் சார்ந்த உற்பத்திப் பொருட்களின் ஏற்றுமதியானது 17.34% அதிகரித்துள்ளது.
    • தானியங்கள், கோதுமை, சிறுதானியங்கள், பாஸ்மதி ரகம் சாரா அரிசி வகைகள், சோளம் மற்றும் இதர மோட்டா தானியங்கள் ஆகியவற்றின் ஏற்றுமதியில் இந்தியா பெரும் வளர்ச்சியைக் கண்டுள்ளது.
  • அல்பேனியா, பிரேசில், கேபோன், கானா மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட நாடுகளும் ஐக்கிய நாடுகளின் பாதுகாப்புச் சபைக்கு (தற்காலிக உறுப்பினர்களாக) தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளன.
    • இந்த ஐந்து நாடுகளும் அந்தந்த பிராந்தியக் குழுமத்திலிருந்து அவை மட்டுமே போட்டியிட்டதால் அவை போட்டியின்றித் தேர்வு செய்யப் பட்டன.
  • வான்வழி மருந்து வழங்கீடுதிட்டத்தைச் செயல்படுத்துவதற்காக பிளிப்கார்ட் நிறுவனமானது தெலுங்கானா மாநில அரசுடன் கைகோர்த்துள்ளது.
    • இத்திட்டத்தின் கீழ் தொலைதூர கிராமப் பகுதிகளுக்கு ஆளில்லாத விமானங்கள் மூலம் மருத்துவ வழங்கீடுகளை வழங்குவதற்கான பணியை மேற்கொண்டு செயல்படுத்துமாறு இக்கூட்டமைப்பிற்குப் பணிக்கப் பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்