TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

June 16 , 2021 1168 days 588 0
  • அரசிற்கான தலைமை அறிவியல் ஆலோசகரின் அலுவலகமானதுஇந்தியாவிற்கான Project O2  திட்டம் எனும் திட்டத்தைத்  தொடங்கி வைத்துள்ளது.
    • ஜியோலைட்டுகள் போன்ற முக்கியமான மூலப் பொருட்களின் வழங்கீடு, காற்றழுத்த சாதனத் தயாரிப்பு மற்றும் சிறிய ஆக்சிஜன் உற்பத்தி ஆலைகளை அமைத்தல் போன்றவற்றை உறுதி செய்வதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • இந்திய நாட்டைச் சேர்ந்த நாகராஜ் அடிகா என்பவர் ஆசிய-ஓசியானியா பகுதியின் பிரதிநிதியாக (Asia-Oceania Representative) தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
    • சமீபத்தில் நடைபெற்ற 2021 ஆம் ஆண்டு சர்வதேச அதிதொலைவு ஓட்டப்பந்தய வீரர்கள் கூட்டமைப்பின் (International Association of Ultrorunners – IAU) மாநாட்டில் இவர் தேர்ந்தெடுக்கப் பட்டார்.
  • நோபல் பரிசு பெற்ற அமர்த்தியா சென் அவர்கள் “Home in the world” எனும் தனது வாழ்க்கை வரலாற்றுக் குறிப்பினை எழுதியுள்ளார்.
    • இந்தப் புத்தகமானது ஜூலை மாதத்தில் பெங்குயின் ரான்டம் ஹவுஸ் எனும் பதிப்பகத்தினால் வெளியிடப்பட உள்ளது.
  • கொரோனா பெருந்தொற்று காலத்தின் மத்தியில் உலகில் முகக்கவசம் அணியாத  முதலாவது நாடு எனும் நிலையை இஸ்ரேல் அடைய உள்ளது.
    • இது இஸ்ரேலின் சுகாதார அமைச்சரான யூலி ஈடெல்ஸ்டெய்ன் (Yuli Edelstein) என்பவரால் அறிவிக்கப் பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்