TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

June 18 , 2021 1166 days 691 0
  • D. குகேஷ் என்பவர் $15000 மதிப்புள்ள கெல்ஃபாண்ட் சேலஞ்ச் சதுரங்கப் போட்டிப் பட்டத்தினை வென்றுள்ளார்.
    • மேலும் இவர் எலைட் மெல்ட்வாட்டர்ஸ் சாம்பியன்ஸ் சதுரங்கப் போட்டியில் கலந்து கொள்வதற்கான ஒரு வாய்ப்பினையும் பெற்றுள்ளார்.
  • அருணா தன்வார் என்பவர் பாரா ஒலிம்பிக் போட்டியில் டேக்வாண்டா (Taekwondo) என்ற போட்டியில் இந்தியா சார்பாக பங்கேற்கும் முதல் நபராவார்.
    • டோக்கியோ பாரா ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்பதற்கான ஒரு வாய்ப்பும் இவருக்கு வழங்கப் பட்டுள்ளது.
  • ஐக்கிய ராஜ்ஜியம் மற்றும் இந்தியா ஆகிய நாடுகளின் அறிவியலாளர்கள் ஒன்றிணைந்து கழிவு நீரினுள் கோவிட்-19 தொற்றை உருவாக்கும் வைரசின் துணுக்குகளை கண்டறியக் கூடிய மலிவு விலையிலான ஓர் உணர்வியினை உருவாக்கியுள்ளனர்.
    • இது ஸ்ட்ராத்க்லைட் பல்கலைக்கழகம் மற்றும் மும்பையின் இந்திய தொழில் நுட்பக் கல்வி நிறுவனம் ஆகியவற்றின் ஆராய்ச்சியாளர்களால் உருவாக்கப் பட்டது.
  • நாகப்பட்டினம் தொகுதியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் A.K.S. விஜயன் அவர்களை டெல்லியில் தனது சிறப்புப் பிரதிநிதியாக தமிழக அரசு நியமித்துள்ளது.
    • இவரின் பதவிக் காலம் ஓராண்டு ஆகும்.
  • மும்பையின் இந்திய தொழில்நுட்பக் கல்வி நிறுவனமானது கொய்தா என்ற ஒரு அறக்கட்டளையின் கீழ்கொய்தா டிஜிட்டல் சுகாதார மையத்தினைஅமைத்துள்ளது.
    • இது இந்தியாவின் முதல் டிஜிட்டல் சுகாதார மையமாக திகழும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்