TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

April 21 , 2018 2412 days 825 0
  • SBI உயிர் காப்பீட்டு நிறுவனத்தின் புதிய மேலாண் இயக்குநர் மற்றும் தலைமை செயல் அதிகாரியாக சஞ்சீவ் நவுட்டியால் நியமிக்கப்பட்டுள்ளார். SBI குழுமத்தில் முக்கியப் பொறுப்பு வகித்த அரிஜித் பாசு இதற்கு முன்னர் மேலாண் இயக்குநர் மற்றும் தலைமை செயல் அதிகாரியாக பணியாற்றினார். திரு.நாட்டியால் வங்கிப் பணியாளர்களுக்கான இந்தியக் கழகத்தின் சான்றளிக்கப்பட்ட கூட்டிணைவாளர் ஆவார் (Certified Associate).
  • இமாச்சலப் பிரதேச மாநில சுகாதாரத்துறை அமைச்சர், குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுப்பதை ஊக்குவிப்பதை நோக்கமாகக் கொண்ட தாய்மார்களின் முழுமையான அன்பு என்ற திட்டத்தைத் தொடங்கி வைத்தார்.
  • திரிபுரா முதலமைச்சர் பிப்லப் குமார் தேப் பிரதம மந்திரி கவுசல் விகாஸ் யோஜனா திட்டத்தை அகர்தலாவில் தொடங்கி வைத்தார். 1,16,000-க்கும் மேற்பட்ட இளைஞர்களுக்கு 2020ல் பயிற்சி வழங்கும் இலக்கை அடைவதற்கான உறுதியை அவர் அளித்துள்ளார்.
    • திறன் மேம்பாட்டு இயக்குநரகத்தின் மூலமாக PMKVY திட்டத்தைச் செயலாக்கும் செய்யும் முதல் வடகிழக்கு மாநிலம் திரிபுரா ஆகும்.
  • மூன்றாம் பாலினத்தவர்கள் தங்களுடைய வரி தொடர்பான பரிவர்த்தனைகளுக்காக நிரந்தர கணக்கு எண்ணை (Permanent Account Number - PAN) பெறுவதற்காக அவர்களை தனிநபர் வகை விண்ணப்பதாரராக அங்கீகரிக்கும் வகையில் மத்திய அரசு வருமான வரி விதிகளை (வருமான வரிச் சட்டத்தின் பிரிவுகள் 139A மற்றும் 295 ஆகியவற்றின் கீழ்) திருத்தியுள்ளது.
  • இயக்குனர் ஜெனரல் (Inspector General - IG) விஜய் சாஃபேகர், இந்திய கடலோரக் காவல்படையின் (மேற்கு மண்டலம்) தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கு முன்னர் இப்பணியிருந்த K R நவுட்டியால் கூடுதல் பொது மேலாளர் மற்றும் இந்திய கடலோரக் காவல் படைத் தலைவராக (கிழக்குக் கடல் பகுதி, விசாகப்பட்டினம்) நியமிக்கப்பட்டுள்ளார்.
    • இந்தியக் கடலோரக் காவல்படை (மேற்கு மண்டலம்) ஆனது மஹாராஷ்டிரா, கோவா, கர்நாடகா, கேரளா, டாமன் மற்றும் டையு மற்றும் இலட்சத் தீவுகள் ஆகிய பகுதிகளில் கடற்கரைப் பகுதிகளில் இருந்து பிரத்தியேக பொருளாதார மண்டலத்தின் எல்லைப் பகுதிகள் வரை பரந்து காணப்படும் சிக்கலான பகுதிகளைக் கொண்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்