கனிம ஆய்வுகளை ஊக்குவிப்பதற்காக இந்தியாவும் மொராக்கோவும் ஐந்து ஆண்டு காலத்திற்கு சுரங்கம் மற்றும் நிலவியல் துறைகளில் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டுள்ளன.
போர் வானூர்தியான F/A – 18 சூப்பர் ஹார்னெட் வானூர்தியை இந்தியாவிலேயே தயாரிப்பதற்காக அமெரிக்க வானூர்தி உற்பத்தியாளரான போயிங் நிறுவனத்தின் (Boeing) போயிங் இந்தியா கிளை இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் (Hindustan Aeronautics Ltd-HAL) மற்றும் மகேந்திரா பாதுகாப்பு அமைப்பு (Mahindra Defence Systems) ஆகியவை ஓர் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன. இந்த சூப்பர் ஹார்னெட் வானூர்தி ஆனது, அமெரிக்க கடற்படையின் முக்கிய விமானந்தாங்கி கப்பலின் போர் வானூர்தி ஆகும்.