TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

July 1 , 2021 1152 days 607 0
  • உமேஷ் சின்ஹா அவர்களை துணைத் தேர்தல் ஆணையராக மறுநியமனம் செய்து அவரது பதவிக் காலத்தை நீட்டிப்பதற்கு அமைச்சரவையின் நியமனக் குழு ஒப்புதல் அளித்துள்ளது.
    • இது ஓராண்டு காலத்திற்கான ஒரு ஒப்பந்த அடிப்படையில் மேற்கொள்ளப் பட்டு இருக்கிறது.
  • தீபிகா குமாரி, கோமாலிகா பாரி மற்றும் அங்கிதா பகத் ஆகியோர் அடங்கிய இந்திய மகளிர் வில்வித்தை அணியானது பாரீசில் நடைபெற்ற வில்வித்தை உலகக் கோப்பையின் மூன்றாம் கட்டப் போட்டியில் தங்கப் பதக்கத்தை வென்றுள்ளது.
    • இந்த அணியானது இறுதிப் போட்டியில் மெக்சிகோ அணியைத் தோற்கடித்தது.
  • உக்ரைன் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் கருங்கடலில் சீ பிரீஸ் டிரில்ஸ்எனப்படும் ஒரு கூட்டு இராணுவப் பயிற்சியைத் தொடங்கியுள்ளன.
    • இந்த ‘சீ பிரீஸ் டிரில்ஸ்’ பயிற்சியானது 1997 ஆம் ஆண்டு முதல் இன்று வரையில்  21 முறைகள் மேற்கொள்ளப் பட்டுள்ளது.
  • கௌசிக் பாசு எழுதிய “Policymaker’s Journal : From New Delhi to Washington, DC” என்று தலைப்பிடப்பட்ட ஒரு புத்தகமானது விரைவில் வெளியாக உள்ளது.
    • கௌசிக் பாசு அவர்கள் 2012 ஆம் ஆண்டு முதல் 2016 ஆம் ஆண்டு வரை உலக வங்கியின் தலைமைப் பொருளாதார நிபுணராகப் பணியாற்றிய ஒரு இந்தியப் பொருளாதார வல்லுநராவார்.
  • பின்லாந்தில் நடைபெற்ற குர்தேன் விளையாட்டுப் போட்டியில் ஈட்டி எறிதல் என்ற வகை போட்டியில் நீரஜ் சோப்ரா வெண்கலப் பதக்கத்தினை வென்றுள்ளார்.
    • இவர் ஜெர்மனியின் ஜோஹன்சென்ஸ் வெட்டெர் மற்றும் திரிநாடு மற்றும் டொபாகோ நாட்டினைச் சேர்ந்த கெசோர்ன் வால்கோட் ஆகியோருக்கு அடுத்த நிலையில் உள்ளார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்