TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

July 9 , 2021 1144 days 537 0
  • சரக்கு மற்றும் சேவை  வரி வசூலானது ஜுன் மாதத்தில் 1 லட்சம் கோடி ரூபாய்க்கும் கீழ் சரிந்துள்ளது.
    • இதற்கு முன்பு இது தொடர்ந்து எட்டு மாதங்களாக ஒரு லட்சத்தைத் தாண்டியே இருந்தது.
  • கொரியன் ஏர் எனும் விமானப் போக்குவரத்து நிறுவனமானது விமானப் போக்குவரத்துத் துறை எனும் ஊடகத்தின் “2021 ஆம் ஆண்டிற்கான சிறந்த ஏர்லைன் நிறுவனம்என்ற நிலையைப் பெற்ற ஒரு நிறுவனமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
  • அமேசான் நிறுவனத்தின் நிறுவனரான ஜெஃப் பெசோஸ் தனது தலைமை நிர்வாகப் பொறுப்பினை ஆன்டி ஜெசி என்பவரிடம் ஒப்படைத்தார்.
    • இவர் வாசிங்டன் போஸ்ட், புளூ ஆரிஜின் எனும் விண்வெளி நிறுவனம் மற்றும் நன்கொடை சேவை போன்றவற்றில் அதிக நேரத்தைச் செலவிட விரும்பியுள்ளார்.
  • உலக சாக்லேட் தினம் அல்லது சர்வதேச சாக்லெட் தினமானது ஒவ்வோர் ஆண்டும் ஜூலை 07 ஆம் நாளன்று கொண்டாடப்படுகிறது.
    • இது நமது வாழ்வில் அங்கம் வகிக்கும் சாக்லேட்டுகளைக் கொண்டாடும் வகையில் அனுசரிக்கப் படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்