TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

July 15 , 2021 1138 days 691 0
  • மதுரை மல்லி மற்றும் பட்டன் ரோஸ், அல்லி, சாமந்தி மற்றும் துலுக்கச் சாமந்தி (செண்டுப் பூ) போன்ற பாரம்பரிய மலர்கள் அடங்கிய ஒரு பெட்டகமானது சமீபத்தில் தமிழ்நாட்டிலிருந்து அமெரிக்கா மற்றும் துபாய் போன்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப் பட்டது.
    • 2013 ஆம் ஆண்டில் மதுரை மல்லிக்குப் புவிசார் குறியீடு வழங்கப்பட்டது.
  • 2100 ஆம் ஆண்டிற்குள் தொழில்துறைக் காலத்திற்கு முன்பு இருந்த வெப்ப நிலையிலிருந்து 3.7 டிகிரி செல்சியஸ் என்ற அளவிற்கு வெப்பநிலை அதிகரிக்கும் ஒரு நிகழ்வானது மலேரியா மற்றும் டெங்கு போன்றவற்றின் அபாயகரமான பெருந் தொற்றிற்கு வழி வகுக்கும்.
    • இது லேன்செட் பிளானிட்டரி ஹெல்த் எனும் அமைப்பினால் வெளியிடப்பட்டுள்ள ஒரு ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
  • நம்பர் 1 கோர்ட் எனும் அரங்கில் நடைபெற்ற விம்பிள்டன் இளையோர் ஆடவர் போட்டியில் இந்திய அமெரிக்கர் சமீர் பானர்ஜி வெற்றி பெற்றார்.
    • இவர் அமெரிக்காவின் விக்டர் லிவோவ் என்பவரைத் தோற்கடித்தார்.
  • உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி R. சுப்பையா அவர்கள் சென்னையில் அமைந்துள்ள மாநில நுகர்வோர் குறைதீர்ப்பு ஆணையத்தின் தலைவராகப் பொறுப்பேற்றுள்ளார்.
    • நீதிபதி  சுப்பையா அவர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் தனது பணிக்காலம் முடிந்ததை அடுத்து ஜுன் மாதத்தில் பணி ஓய்வு பெற்றார்.
  • அனைத்துக் குடிமக்களுக்கும் சுற்றுலாப் பயணிகளுக்கும் கோவிட்-19 தடுப்பூசியின் முதல் தவணையைச் செலுத்திய முதல் ஒன்றியப் பிரதேசமாக லடாக் உருவெடுத்து உள்ளது.
    • இதில் புலம்பெயர் தொழிலாளர்கள், தங்கும் விடுதி ஊழியர்கள் மற்றும் இப்பகுதியில் பணியாற்றும் நேபாளக் குடிமக்கள் ஆகியோரும் அடங்குவர்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்