TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

July 22 , 2021 1131 days 688 0
  • ஜெர்மனியின் டார்ட்மண்ட் என்னுமிடத்தில் நடைபெற்ற ஸ்பார்கசென் டிராபி (Sparkassen Trophy) என்ற ஒரு செஸ் போட்டியில் ரஷ்யாவின் விளாடிமிர் க்ரம்னிக் என்பவரை வீழ்த்தி விஸ்வநாதன் ஆனந்த் வெற்றி பெற்றுள்ளார்.
  • பொருளாதாரம் மற்றும் வர்த்தகப் பிரச்சினைகள் மீதான BRICS அமைப்பின் தொடர்பு குழுவின் ஒரு சந்திப்பிற்கு இந்தியா சமீபத்தில் தலைமை தாங்கியது.
  • சர்வதேச கிரிக்கெட் மன்றமானது மங்கோலியா, தஜகிஸ்தான், மற்றும் ஸ்விட்சர்லாந்து ஆகிய நாடுகளை தனது உறுப்பினராக சேர்த்துள்ளது.
    • சர்வதேச கிரிக்கெட் மன்றமானது தற்போது 106 உறுப்பினர்களுடன் 94 இணை உறுப்பினர்களையும் கொண்டுள்ளது.
  • மத்திய சிறுபான்மையினர் விவகாரங்கள் துறை அமைச்சரான பாஜகவின் முக்தார் அப்பாஸ் நக்வி மாநிலங்களவையின் துணைத் தலைவராக நியமிக்கப் பட்டுள்ளார்.
  • முன்னாள் இந்திய மற்றும் மோஹுன் பாகன் கிளப்பின் கால்பந்து கோல் கீப்பரான மறைந்த ஷிபாஜி பானர்ஜிக்கு மோஹன் பாகன் ரத்னா விருதானது வழங்கப் பட உள்ளது.
    • ஃபிஜிய நாட்டுக் கால்பந்தாட்ட வீரரான ராய் கிருஷ்ணா 2020-21 ஆம் ஆண்டின் சிறந்த கால்பந்து வீரராகத் தேர்வு செய்யப்பட்டார்.
  • பாஜக தலைவர் சுதான்ஷு மிட்டல் அவர்களின் ராஷ்டிரிய சுயம்சேவக் சங்கம் (ஆர்எஸ்எஸ்) பற்றிய “RSS: Building India Through SEWA” என்ற புத்தகமானது இப்போது சீன மொழியில் மொழி பெயர்க்கப் பட்டுள்ளது.
    • இது ஆர்.எஸ்.எஸ்ஸின் வரலாறு, சித்தாந்தம் மற்றும் கொள்கைகள் மற்றும் அவை நாட்டில் அடுத்தடுத்து ஏற்படுத்திய தாக்கத்தைப் பற்றி பேசுகிறது.
  • ஓய்வூதிய நிதி நிர்வாகத்தில் அந்நிய நேரடி முதலீட்டு வரம்பை தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் 49 சதவீதத்திலிருந்து 74 சதவீதமாக உயர்த்த அரசாங்கம் அறிவித்து உள்ளது.
    • தேசிய ஓய்வூதியத் திட்டமானது ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையத்தால் கட்டுப்படுத்தப்படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்