TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

July 23 , 2021 1130 days 504 0
  • மத்திய மின்துறை அமைச்சர் P.K. சிங் அவர்கள் புதுடெல்லியில் மாநில மின் பகிர்வு மையத்திற்கான 9வது ஒருங்கிணைந்த மதிப்பீடுகளை வெளியிட்டார்.
    • இது 1986 ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட மின்சக்தி நிதியக் கழகத்தின் 36வது நிறுவன தினமான ஜூலை 17 அன்று வெளியிடப்பட்டது.
  • காவல்துறையினர் அல்லது பிற அரசு அதிகாரிகளால் சிறைக் காவலில் இருப்பவர் சித்திரவதை செய்யப்பட்டுக் கொலை செய்யப்படுவதைத் தடுப்பதற்காக வேண்டி அவற்றைக் குற்றமாக நிர்ணயிக்கும் ஒரு புதிய மசோதா ஒன்றினை பாகிஸ்தான் பாராளுமன்றம் நிறைவேற்றியுள்ளது.
  • 2021 ஆம் ஆண்டு கேலோ இந்தியா இளையோர் விளையாட்டுப் போட்டிகளானது 2022 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் நடத்தப்படும் என ஹரியானா அரசு அறிவித்து உள்ளது.
    • இது 18 வயதிற்குட்பட்டவர்களுக்கான பிரிவில் நடத்தப்பட உள்ள ஒரு போட்டி ஆகும்.
  • மாநிலத்தில் உள்ள அனைத்துக் கர்ப்பிணிப் பெண்களுக்கும்  கோவிட்-19 தடுப்பு மருந்துகளை வழங்குவதற்காகமாத்ரூ கவசம்எனும் ஒரு இயக்கத்தை கேரள அரசு தொடங்க உள்ளது.
  • வேளாண் உள்கட்டமைப்பு நிதியானது மாநில நிறுவனங்கள் அல்லது வேளாண் பொருட்கள் சந்தைக் குழுக்கள், தேசிய மற்றும் மாநில கூட்டுறவுச் சங்கங்கள், சுய உதவிக் குழுக்களின் சங்கங்கள் மற்றும் விவசாயிகள் உற்பத்தியாளர் அமைப்புகள் ஆகியவற்றிற்கும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.
    • 1 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான வேளாண் உள்கட்டமைப்பு நிதியை விரிவுபடுத்தும் நோக்கில் இந்த நடவடிக்கையானது மேற்கொள்ளப் பட்டுள்ளது.
  • இந்துஸ்தான் ஏரோனாடிக்ஸ் லிமிடெட் நிறுவனமானது உலகின் இலகுரக போர் செயல்பாடுகளுக்கான ஹெலிகாப்டர்களின் முதல் தொகுதியினை இந்திய விமானப் படையிடம் ஒப்படைக்க உள்ளது.
  • இந்தியக் கடற்படையானது அமெரிக்க விண்வெளி நிறுவனமான போயிங் என்ற ஒரு நிறுவனத்திடமிருந்து பத்து P-8I ரக நீர்மூழ்கி எதிர்ப்பு போர் விமானங்களைப் பெற்று உள்ளது.
  • உலகின் முப்பரிமாண  முறையில் அச்சிடப்பட்ட முதல் எஃகு நடைபாலமானது நெதர்லாந்திலுள்ள ஆம்ஸ்டர்டாமில் திறக்கப்பட்டுள்ளது.
  • மாநிலத்தில் இலக்கு நிர்ணயிக்கப்பட்ட பொது விநியோக முறையை மேம்படுத்தச் செய்வதற்காக வேண்டி இராஜஸ்தான் மாநில அரசானது இந்தியாவிலுள்ள ஐக்கிய நாடுகளின் உலக உணவு மேம்பாட்டுத் திட்ட அமைப்புப் பிரிவோடு கைகோர்த்து உள்ளது.
  • உத்தரகாண்ட் மாநிலத்தின் குமாவோன் பகுதியில் புதிய அறுவடை மற்றும் பருவ மழைக் காலம் தொடங்கியதை நினைவு கூரும் வகையில் ஹரேலா என்ற பண்டிகை கொண்டாடப் படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்