TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

July 29 , 2021 1124 days 486 0
  • டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளில் நான்கு புதிய விளையாட்டுப் போட்டிகள் அறிமுகப் படுத்தப் பட்டுள்ளன.
    • அவை கராத்தே (தற்காப்புக் கலை), கடல் அலை சறுக்கு (surfing), ஸ்கேட்போர்டிங் மற்றும் உயரம் ஏறுதல் போட்டி (Sport Climbing) ஆகியனவாகும்.
  • முன்னாள் தேர்தல் ஆணையர் அசோக் லவாசா, “An Ordinary Life : Portrait of an Indian Generation” எனும் ஒரு புத்தகத்தை வெளியிட்டுள்ளார்.
    • அசோக் லவாசா ஆசிய மேம்பாட்டு வங்கியின் துணைத் தலைவராக பொறுப்பேற்பதற்காக வேண்டி 2020 ஆம் ஆண்டில் தனது தேர்தல் ஆணையர் பொறுப்பை ராஜினாமா செய்தார்.
  • நவீன் பட்நாயக் தலைமையிலான ஒடிசா மாநில அரசானது இந்தியாவிலேயே நகரம் முழுவதும் பாதுகாப்பான குடிநீர் வசதியைக் கொண்ட முதல் நகரம் என்று பூரி நகரை அறிவித்துள்ளது.
  • ரஷ்யாவில் நடைபெற உள்ள ஒரு விண்வெளிப் பயிற்சியில் பங்கேற்க வேண்டி அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த ரக்சயா மற்றும் வேதஸ்ரீ ஆகியோர் தேர்வு செய்யப் பட்டுள்ளனர்.
    • அவர்கள் திருமனூர் அரசு உயர்நிலைப்பள்ளியில் 11 ஆம் வகுப்பு படிக்கின்றனர்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்