TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

August 6 , 2021 1116 days 563 0
  • உலகளாவிய முதல் 100 இடங்களில் இருந்து வெளியேறி மும்பை மற்றும் பெங்களூரு ஆகியவை முறையே 106 மற்றும் 110 ஆகிய இடங்களில் உள்ளன.
    • QS சிறந்த மாணவர்களுக்கான நகரங்கள் தரவரிசையின் சமீபத்தியப் பதிப்பில் இந்த தகவல்கள் தெரிவிக்கப் பட்டுள்ளன.
  • இன்டஸ்இந்த் வங்கியினை ஒரு முகமை வங்கியாகச் செயல்படுவதற்கு இந்திய ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது.
    • இன்டஸ்இந்த் வங்கியானது ஒரு முகமை வங்கியாக அரசினால் இயக்கப்படும் அனைத்து வகையான வணிகம் தொடர்பான பரிவர்த்தனைகளையும் மேற்கொள்வதற்கு தகுதி பெறுகிறது.
  • ஆகஸ்ட் 04 அன்று சர்வதேச படைச்சிறுத்தை தினமானது (Clouded Leopard Day) அனுசரிக்கப் பட்டது.
    • இத்தினமானது சர்வதேச அளவிலான விழிப்புணர்வையும், காப்பகங்கள் மற்றும் வனப்பகுதிகளில் படைச்சிறுத்தைகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கான முயற்சியையும் உருவாக்குகிறது.
  • ரூர்க்கியின் இந்திய தொழில்நுட்பக் கல்வி நிறுவனமானதுஉத்தரகாண்ட் பூகம்ப எச்சரிக்கைச் செயலியைவெளியிட்டுள்ளது.
    • இது இந்தியாவின் முதலாவது பூகம்ப முன்னெச்சரிக்கைக்கான கைபேசிச் செயலியாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்