TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

August 14 , 2021 1108 days 553 0
  • உலகெங்கிலுமுள்ள யானைகளின் வளங்காப்பு மற்றும் பாதுகாப்புக்காக ஒவ்வோர் ஆண்டும் ஆகஸ்ட் 12 ஆம் தேதியன்று உலக யானைகள் தினமானது அனுசரிக்கப் படுகின்றது.
    • உலக யானைகள் தினமானது 2012 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 12 அன்று தொடங்கப் பட்டது.
  • ஈரானின் புதிய அதிபர் இப்ராஹிம் ரைசி, முகமது மொக்பர் என்பவரை அந்நாட்டின் முதலாவது துணை அதிபராக நியமித்துள்ளார்.
    • முகமது மொக்பர், செட்டாட் எனப்படும் ஒரு அறக்கட்டளைக்கு பல ஆண்டுகளாக தலைமை தாங்கி வந்தவராவார்.
  • டெல்லியின் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தேசியத் தலைநகரில் முகமற்ற போக்குவரத்துச் சேவையைத் தொடங்கி வைத்துள்ளார்.
    • இந்த முன்னெடுப்பின் கீழ், வாகனங்களுக்கான ஓட்டுநர் சோதனைகள் மற்றும் தகுதிச் சோதனைகள் தவிர, 33 போக்குவரத்துச் சேவைகள் முழுவதுமாக முகமற்ற மற்றும் இணைய தளச் சேவையாக மாற்றப்படும்.
  • கொரோனா காரணமாக ஆதரவற்ற நிலையில் தவிக்கும் குழந்தைகளுக்கு கல்வியிலும், வேலைவாய்ப்பிலும் 1% இடஒதுக்கீடு வழங்குவதற்கு மகாராஷ்டிர மாநில அரசு முடிவு செய்துள்ளது.
    • வயது, தேர்வுக் கட்டணம், கல்வி உதவித்தொகை, பட்டியலினச் சாதியினருக்குக் கல்விக் கட்டணத்தைத் திரும்பச் செலுத்துதல் உள்ளிட்டச் சலுகைகளை வழங்கவும் அம்மாநில அரசு முடிவு செய்துள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்