TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

August 15 , 2021 1107 days 618 0
  • சுற்றுச்சூழல் அமைச்சகமானது 2021 ஆம் ஆண்டிற்கான நெகிழிக் கழிவு மேலாண்மைத் திருத்த விதிகளை சமீபத்தில் அறிவித்தது.
    • இந்தப் புதிய விதிகளானது 2022 ஆம் ஆண்டிற்குள்  குறைவானப் பயன்பாடு மற்றும் அதிகளவில் குப்பையாக குவிக்கப்படும்ஒற்றைப் பயன்பாட்டு நெகிழிப் பொருட்களைத் தடை செய்ய விழைகின்றது.
  • சாஃப்ட்வொர்த்தி (SoftWorthy) எனும் இந்திய நிறுவனத்திற்கு அமெரிக்காவின் மதிப்பு மிக்க தேசிய அறிவியல் அறக்கட்டளையின் புத்தாக்கப் பிரிவு அணி விருதானது வழங்கப் பட்டுள்ளது.
    • விருது பெற்றுள்ள சாஃப்ட்வெர்த்தி நிறுவனத்தின் திட்டமானது ஓட்டுநரில்லா வாகனங்கள் மற்றும் ஆற்றல் செயல்திறனுடன் கூடிய ஸ்மார்ட் கட்டிடங்கள் போன்ற புதிய தொழில்நுட்பப் பயன்பாடுகளின் மேம்பாட்டில் ஈடுபாடு செலுத்துகிறது.
  • தொற்றுநோயின் தாக்கத்தினால் பாதிக்கப்பட்ட 2020-21 ஆம் நிதியாண்டில், 2020 ஆம் ஆண்டில் 141 ஆக இருந்த இந்தியக் கோடீஸ்வரர்களின் எண்ணிக்கையானது 136 ஆக குறைந்துள்ளது.
    • வருமான வரி விவரங்களுக்கான அறிக்கையில் அறிவிக்கப்பட்ட மொத்தக் கூட்டு வருமானத்தின் அடிப்படையில் இந்தத்  தகவல் கூறப்பட்டுள்ளது.
  • ஒவ்வோர் ஆண்டும் ஆகஸ்ட் 13 அன்று சர்வதேச ஓநாய் தினமானது அனுசரிக்கப் படுகின்றது.
    • இந்தக் காட்டு நாய் வகை உயிரினம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தச் செய்வதற்காக இந்த தினமானது அனுசரிக்கப் படுகின்றது.
  • ஒவ்வோர் ஆண்டும் ஆகஸ்ட் 13 ஆம் தேதியன்று உலக உடலுறுப்பு தான தினமானது கடைபிடிக்கப் படுகிறது.
    • உடலுறுப்பு தானத்தின் முக்கியத்துவம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவும் இறந்த பிறகு உடல் உறுப்புகளை தானம் செய்ய மக்களை ஊக்குவிக்கவும் வேண்டி இந்த தினமானது அனுசரிக்கப் படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்