TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

August 21 , 2021 1101 days 557 0
  • உத்தரப் பிரதேச அரசானது சஹ்ரான்பூரின் தியோபந்த் எனுமிடத்தில் தீவிரவாத எதிர்ப்புக் குழு படைகளுக்கான ஒரு பயிற்சி மையத்தினை நிறுவுவதற்கு முடிவு செய்து உள்ளது.
    • தியோபந்த் எனுமிடமானது உத்தராஞ்சல் மற்றும் ஹரியானா மாநில எல்லையில் அமைந்துள்ளது.
  • ஆகஸ்ட் 19 ஆம் தேதியானது வருடாந்திர சர்வதேச ஒராங்குட்டான் தினமாகும்.
    • இந்த சர்வதேச நிகழ்வானது, மிகவும் அருகி வரும் ஒராங்குட்டான் இனங்களின் பாதுகாப்பினை மேம்படுத்துவதையும் அவற்றின் வாழ்விடத்தின் நலன் பேணுவதை ஊக்குவிப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • 2021 ஆம் ஆண்டு உலக தடகள U20 சாம்பியன்சிப் போட்டிகளானது கென்யாவிலுள்ள நைரோபியில் தொடங்கப்பட்டுள்ளது.
    • உலக U20 சாம்பியன்சிப் போட்டிகளானது 2021 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 17 முதல் ஆகஸ்ட் 22 வரை நடத்தப் படுகின்றன.
  • ஆம்வே இந்திய நிறுவனமானது ஒலிம்பிக் பதக்க வீராங்கனை சைக்கோம் மீராபாய் சானுவை, ஆம்வே மற்றும் அதன் நியூட்ரிலைட் ரக தயாரிப்புப் பொருட்களுக்கான விளம்பரத் தூதராக நியமித்துள்ளது.
    • பளு தூக்கும் வீராங்கனையான சானு, 2020 டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளின் மகளிருக்கான 49 கிலோ எடைப் பிரிவில் வெள்ளிப்பதக்கம் வென்றவராவார்.
  • லியோனெல் மெசி, பார்சிலோனாவுடனான 21 ஆண்டு காலப் பயணத்திற்குப் பிறகு அந்த அணியிலிருந்து விலகி பாரீஸ் செயின்ட் ஜெர்மாய்ன் கால்பந்து அணியில் இணைந்துள்ளார்.
    • பார்சிலோனா அணி என்பது அவர் தனது தொழில்முறை கால்பந்து விளையாட்டைத் தொடங்கிய அணியாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்