TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

August 25 , 2021 1097 days 572 0
  • ஹரியானா முதல்வர் மனோகர் லால் கட்டார், ஹிசார் விமான நிலையத்தை மகாராஜா அக்ரசேன் சர்வதேச விமான நிலையம் எனப் பெயர் மாற்றம் செய்வதாக அறிவித்துள்ளார்.
    • ஹிசார் விமான நிலையமானது ஓர் உள்நாட்டு விமான நிலையமாகும்.  மேலும் இது DGCA உரிமம் பெற்ற மாநிலத்தின் முதல் பொதுத்துறை விமான நிலையம் ஆகும்.s
  • லாத்வியாவின் ரைகா என்னுமிடத்தில் நடைபெற்ற RTU ஓபன் பிளிட்ஸ் செஸ் (சதுரங்கம்) போட்டியில் (RTU Open blitz chess title) R. பிரக்ஞானந்தா வெற்றி பெற்று உள்ளார்.
    • R. பிரக்ஞானந்தா, கிராண்ட்மாஸ்டர் பட்டத்தைப் பெற்ற 5வது இளம்வயது நபர் ஆவார்.
  • தமிழ்நாட்டைச் சேர்ந்த மூத்த பா... தலைவர் இல. கணேசன் மணிப்பூரின் புதிய ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார்.
    • நஜ்மா ஹெப்துல்லா ஓய்வு பெற்றதையடுத்து அம்மாநில ஆளுநர் பதவி காலியாக இருந்தது.
  • 2026 ஆம் ஆண்டுக்குள் இந்தியா மேலும் 100 நிலநடுக்க ஆய்வகங்களை (observatories) நிறுவும் என அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சர் ஜிதேந்தர் சிங் கூறியுள்ளார்
    • மேலும், இந்த ஆண்டின் இறுதிக்குள் நாட்டில் மேலும் 35 நிலநடுக்க ஆய்வகங்கள் நிறுவப் படும் எனவும் அமைச்சர் அறிவித்துள்ளார்.
  • துருக்கி நாட்டின் அதிபர் ரெசெப் தயிப் எர்டோகன் (Recep Tayyip Erdogan), தமது நாடு ஒரு போதும் ஐரோப்பிய அகதிகளின் புகலிடமாக மாறாது என எச்சரித்துள்ளார்.
    • கொரோனா வைரஸ் பெருந்தொற்றினால் அதிகரித்த அதிக வேலையின்மை உள்ளிட்ட பல சிக்கல்களுடன் அந்நாடு போராடி வருவதால், துருக்கி நாட்டில் புலம்பெயர்ந்தோருக்கு எதிரான உணர்வு அதிகமாக உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்