TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

September 2 , 2021 1089 days 612 0
  • சர்வதேச ஆப்பிரிக்க வம்சாவளி மக்கள் தினமானது 2021 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 31 அன்று முதன்முறையாக அனுசரிக்கப்பட்டது.
    • உலகெங்கிலும் புலம்பெயர்ந்து வாழும் ஆப்பிரிக்க மக்களின் அசாதாரணப் பங்களிப்புகளை ஊக்குவிப்பதையும், ஆப்பிரிக்க வம்சாவளியினருக்கு எதிராக நிலவும் அனைத்து வகையான பாகுபாடுகளை நீக்குவதையும் ஐக்கிய நாடுகள் அமைப்பு நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • பஞ்சாபில் உள்ள அமிர்தசரஸ் என்னுமிடத்தில் அமைந்த ஜாலியன் வாலாபாக் ஸ்மரக்கின் (Jallianwala Bagh Smarak) புதுப்பிக்கப்பட்ட வளாகத்தினை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார்.
    • ஜாலியன் வாலாபாக் படுகொலை நிகழ்ந்த 102வது ஆண்டு நிறைவைக் குறிக்கும் விதமாக இது திறந்து வைக்கப்பட்டுள்ளது.
  • இந்தியாவின் 3 வகை முதலை இனங்களும் காணப்படும் ஒரே மாவட்டமாக ஒடிசாவின் கேந்திரப் பாரா (Kendrapara) மாவட்டம் மாறியுள்ளது.
    • உப்புநீர், ஆற்றுநீர் (கரியால்) மற்றும் சதுப்பு நில முதலை ஆகியவை இங்கு காணப் படுகின்றன.
  • லதாம்ஸ் உள்ளான் குருவி என்பது ஆண்டிற்கு இரு முறை ஜப்பானிலிருந்து ஆஸ்திரேலியா வரை இடை விடாமல் பயணிக்கும் ஒரு நீர்ப்பறவை (கடற்கரைப் பறவை) ஆகும்.
    • ஜப்பானிய உள்ளான் குருவி எனவும் அழைக்கப்படும் இப்பறவையின் அறிவியல் பெயர் கல்லினாகோ ஹார்ட்விக்கி (Gallinago hardwickii) ஆகும்.
  • BRICS நாடுகளின் தேசியப் பாதுகாப்பிற்கான பொறுப்பு வாய்ந்த ஒரு உயர் பிரதிநிதிகளின் 11வது சந்திப்பானது சமீபத்தில் நடத்தப் பட்டது.
    • 2021 ஆம் ஆண்டு BRICS உச்சி மாநாட்டிற்கு இந்தியா தலைமை வகிப்பதன் காரணமாக இந்தியாவின் தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் இந்தச் சந்திப்பினைத் தலைமையேற்று நடத்தினார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்