TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

September 6 , 2021 1085 days 586 0
  • செவ்வாய்க் கிரகத்தின் மீது சுற்றித் திரியும் ஒரு விண்கலமான நாசாவின் பெர்சீவரென்ஸ் விண்கலமானது அக்கிரகத்திலிருந்து முதலாவது பாறை மாதிரிகளைப் புவிக்கு அனுப்புவதற்காக வெற்றிகரமாக சேகரித்துள்ளது.
    • இதன் மூலம் பண்டைய வாழ்க்கை பற்றி இது வெளிப்படுத்தும் என நம்பப் படுகிறது.  
  • இமாச்சலப் பிரதேச மாநிலமானது தனது அனைத்துப் பதின்ம வயதினருக்கும்                  கோவிட்-19 தடுப்பு மருந்தின் முதல் தவணையைச் செலுத்திய முதல் மாநிலமாக மாறியுள்ளது.
  • சவுதி அரேபியாவின் முதலாவது மகளிர் இராணுவ வீரர் படைப்பிரிவினர் ஆயுதப் படைகள் மகளிர் களப்பயிற்சி மையத்திலிருந்து பட்டம் பெற்றுள்ளனர்.
  • 2022 ஆம் ஆண்டானது தென் கிழக்காசிய நாடுகள் கூட்டமைப்பிற்கும் (ASEAN - Association of Southeast Asian Nations) இந்தியாவிற்கும் இடையேயான 30 ஆண்டு காலத் தொடர்பினைக் குறிக்கிறது.
    • மேலும் இந்த ஆண்டு ASEAN – இந்தியா நட்பு வருடமாகவும் நிர்ணயிக்கப் பட்டு உள்ளது.  
  • 2021 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 27 அன்று 1 கோடிக்கும் மேலான அளவில் கோவிட் 19 தடுப்பூசிகளைச் செலுத்திய வகையில் இந்தியா தனது கோவிட் தடுப்பு மருந்து இயக்கத்தில் ஒரு புதிய மைல்கல்லை அடைந்துள்ளது.
    • இது ஒற்றை நாளில் அதிக எண்ணிக்கையில் தடுப்பூசி செலுத்தப்பட்ட ஒரு தினமாகும்.
  • கோவிட் C..I.2. மாற்றுருவானது முதன்முதலில் தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப் பட்டுள்ளது.
    • C..I.2. மாற்றுருவானது அதிக தொற்றுப் பரவல் மிக்கதாகவும் தடுப்பூசிகளால் வழங்கப் படும் எதிர்ப்புத் திறனிலிருந்து விடுபடும் திறன் உள்ளதாகவும் இருக்கும் என ஆய்வில் கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்