கிராம் ஸ்வராஜ் அபியான் திட்டத்தின் ஒரு பகுதியாக நாட்டின் பல்வேறு பகுதிகளில் அஜிவிகா மற்றும் கவுசல் விகாஸ் மேளாக்கள் நடத்தப்பட்டன. இதன் கீழ் வாழ்வாதாரம் மற்றும் திறன் மேம்பாடு ஆகியவற்றின் வெற்றி கொண்டாடப்பட்டது.
பொலிவுறு நகரங்கள் திட்டத்தின் கீழ் அஸ்ஸாம் மாநிலத்தின் கவுகாத்தியில் நாட்டில் மிக உயரமான (3 மீட்டர்) தேசியக் கொடி நிறுவப்படும். இந்த தேசியக்கொடி நிறுவுதல் திட்டத்தின் அணித் தலைவர் அங்குர் தாஸ் ஆவார். இப்பணி தொழில் மற்றும் வர்த்தகத் துறையால் பொலிவுறு நகரங்கள் திட்டத்துடன் இணைந்து மேற்கொள்ளப்படுகிறது.
IAAF உலக சாம்பியன்ஷிப் கால்பந்துப் போட்டியின் 17-வது பதிப்பு கத்தார் நாட்டின் தோகாவிலுள்ள செப்பணிடப்பட்ட பல்நோக்கு கலிஃபா சர்வதேச விளையாட்டு அரங்கத்தில் 2019 ஆம் ஆண்டின் செப்டம்பர் 28 முதல் அக்டோபர் 6 வரை நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.
‘ஸ்டார் கேல் மஹாகும்ப்’ (‘Star Khel Mahakumbh’) எனும் விளையாட்டுத் தொடக்கமானது (Sports initiative) இமாச்சலப் பிரதேச மாநிலத்தின் தர்மசாலாவில் பா.ஜ.க. நாடாளுமன்ற உறுப்பினர் அனுரக் தாகூர் மற்றும் முன்னால் கிரிக்கெட் வீரர் சச்சின் டென்டுல்கர் ஆகியோரால் தொடங்கப்பட்டது. தடகள வீரர்கள் இத்திட்டத்தின் மூலம் கைப்பந்து, கூடைப்பந்து, கிரிக்கெட், கால்பந்து, கபடி மற்றும் உடற்சார்ந்த விளையாட்டுகளில் போட்டியிடுவர்.
தென் ஆப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பெர்க்கில் நடைபெற்ற இந்தியா – தென் ஆப்பிரிக்கா வணிக மாநாட்டில் வணிகம் மற்றும் தொழில்துறை
(Commerce and Industry), மற்றும் விமானப் போக்குவரத்து அமைச்சர் சுரேஷ் பிரபு பங்கேற்றார்.