TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

September 17 , 2021 1074 days 596 0
  • ஹைதராபாத்தைச் சேர்ந்த விண்வெளி தொழில்நுட்பப் புத்தாக்க நிறுவனமான ஸ்கைரூட் ஏரோஸ்பேஸ் (Skyroot Aerospace) நிறுவனம், இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்துடன் முறையான ஒப்பந்தத்தில்  ஈடுபட்ட முதல் தனியார் நிறுவனமாக மாறியுள்ளது.
    • ஸ்கைரூட் ஏரோஸ்பேஸ் நிறுவனமானது விண்வெளிக்குச் சிறிய செயற்கைக் கோள்களை ஏந்திச் செல்லக் கூடிய விக்ரம் ரக ராக்கெட்டுகளைக் கட்டமைத்து வருகிறது.
  • பா.ஜ.க பாராளுமன்ற உறுப்பினர் சுப்ரமணிய சுவாமி தாம் எழுதிய இந்தியாவில் மனித உரிமைகள் மற்றும் தீவிரவாதம் என்று  தலைப்பிடப்பட்ட ஒரு புத்தகத்தை வெளியிட்டார்.
  • மேற்கு ஒடிசாவில் நௌகாய் ஜூஹார் (Nuakhai Juhar) எனப்படும் விவசாயத் திருவிழா கொண்டாடப்பட்டது.
    • இது இப்பருவத்தின் புதிய நெற்பயிர் பருவக் காலத்தை வரவேற்கும் விதமாக மேற்கு ஒடிசா மற்றும் தெற்கு சத்தீஸ்கர் பகுதி மக்களால் கொண்டாடப்படும் ஒரு பயிர்த் திருவிழாவாகும்.S
  • ஜோமாட்டோ நிறுவனத்தின் இணை நிறுவனர் கௌரவ் குப்தா அந்நிறுவனத்தில் அவர்  ஆற்றியப் பணியிலிருந்து விலகியுள்ளார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்