இந்தியாவின் முதல் பட்டியலிடப்பட்ட, அகமதாபாத்தைச் சேர்ந்த வணிக நிறுவனமான இன்பைபீம் (Infibeam), மேக அடிப்படையிலான சரக்கு மேலாண்மை நிறுவனமான (Cloud-based inventory management company) யுனிகாமர்ஸை வாங்க உள்ளது. இன்பைபீம், விருப்பமான மாற்றக்கூடிய கடன் பத்திரங்களின் (Optional convertible debentures - OCD) முன்னுரிமைகளை ஸ்நாப்டீலுக்கு வழங்கும்.
யுனிகாமர்ஸ் நிறுவனமானது ஸ்நாப்டீல் நிறுவனத்தால் முழுவதும் உரிமை கொள்ளப்பட்ட துணை நிறுவனம் ஆகும்
இந்திய ஆயில் நிறுவனத்திற்குப் பிறகு, மத்திய அரசால் உரிமை கொள்ளப்பட்ட இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட், வீட்டிற்கே சென்று டீசலை வழங்கும் முறையை மும்பையில் தொடங்கியுள்ளது. அதோடு, இத்திட்டத்தை நாட்டின் பிற பகுதிகளிலும் விரிவுபடுத்த திட்டமிட்டுள்ளது.
வங்கதேசம், இஸ்லாமிய கூட்டுறவிற்கான நிறுவனத்தின் (Organisation of Islamic Cooperation – OIC) சாசனத்தை மறுகட்டமைப்பு செய்வதற்கு முன்மொழிந்துள்ளது. இந்த மறுகட்டமைப்பானது, இந்தியா போன்ற இஸ்லாமியர் பெரும்பான்மையல்லாத நாடுகளை (Non-Muslim countries) பார்வையாளர் பட்டியலில் இணைப்பதற்கு வழியமைத்துத் தரும்.
OIC என்பது, 57 உறுப்பினர்களைக் கொண்டது. இந்த 57 உறுப்பினர்களும் இஸ்லாமியர் பெரும்பான்மை நாடுகளாகும். OIC –யின் அதிகாரப்பூர்வ மொழிகள்: அரேபியம், ஆங்கிலம் மற்றும் பிரெஞ்சு ஆகும்.
TRA-வின் வியாபாரக்குறி நம்பிக்கை அறிக்கை 2018-ன் படி பதஞ்சலி ஆயுர்வேத நிறுவனமானது இந்தியாவின் மிகவும் வேகமாக வளரும் நுகர்வோர் பொருட்களின் குறி (Brand) எனத் தரவரிசையிடப்பட்டுள்ளது.
பாரத் எனும் 6 நாள் விழாவை புது தில்லி நடத்த உள்ளது. மாட்சிமையுடைய மற்றும் தொன்மையான இந்திய நாகரிகத்தின் 21-ஆம் நூற்றாண்டின் பாராட்டுரைகள் (Tributes) எனக் கருதப்படும் இந்த நிகழ்ச்சி கலைகளுக்கான இந்திரா காந்தி தேசிய மையத்தில் நடைபெறும்.
மாஸ்கோவிலுள்ள ஆர்ரேட் கிரம்ளின் அரங்கத்தில் நடைபெற்ற பதவியேற்பு நிகழ்ச்சியில் திரு. விளாமிடிர் புதின் ரஷ்யாவின் அதிபராக பதவியேற்றுக் கொண்டார். இது புதினின் 4-வது ஆட்சிக் காலமாகும்.அதிபராக பதவியேற்ற பிறகு, 2012-லிருந்து பிரதமர் பதவியை வகித்து வந்த டிமிட்ரி மெட்வெடெவ்வை புதின் பிரதமராக அறிவித்துள்ளார்.
கொல்கத்தாவிலுள்ள நந்தன் திரைப்பட மற்றும் கலாச்சார மையத்தில் திரைப்பட விழாவை ஜூலை 2018-ல் சீனா நடத்தும் என சீனமக்கள் குடியரசிற்கான துணைத் தூதர் (Counsel General) திரு. மா ஜான்வு தெரிவித்துள்ளார்.
30-வது கடற்படை உயர் கட்டளை பயிற்சிக்கான நிறைவு விழா வெரெத்திலுள்ள (Verem) INS மன்தோவி எனும் கடற்படை போர் பயிற்சி கல்லூரியில் நடைபெற்றது.
கடற்படை போர் பயிற்சி என்பது இந்தியக் கடற்படையின் முன்னணி பயிற்சி நிறுவனம் மற்றும் இந்திய ஆயுதப்படைப் பிரிவின் மூன்று போர் பயிற்சிக் கல்லூரிகளில் ஒன்றாகும்.