TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

September 29 , 2021 1062 days 528 0
  • FASTER (மின்னணுப் பதிவுகளின் விரைவான மற்றும் பாதுகாப்பான பரிமாற்றம்) எனப்படும் மின்னணு அமைப்பினை உச்சநீதிமன்றம் அங்கீகரித்துள்ளது.
    • மின்னணு முறையில் அங்கீகரிக்கப்பட்ட நகல்களை நீதிமன்றத்திலிருந்து சிறைச் சாலைகளுக்கு மாற்ற இந்த FASTER அமைப்பானது பயன்படுத்தப் படும்.
  • டெக்சாஸ், ஃப்ளோரிடா, நியூ ஜெர்சி, ஒஹாயோ மற்றும் மாசாசுசெட்ஸ் உள்ளிட்ட பல அமெரிக்க மாகாணங்கள் அக்டோபர் மாதத்தினை இந்துப் பாரம்பரிய மாதமாக அறிவித்துள்ளன.
    • இந்துத்துவமானது அதன் தனித்துவமான வரலாறு மற்றும் பாரம்பரியத்தின் மூலம் அமெரிக்காவிற்கு பெரிதும் பங்காற்றியுள்ளதாக’ அவை கூறுகின்றன.
  • மகளிர் உரிமைகளுக்கான ஆர்வலரும், பிரபல எழுத்தாளருமான பஞ்சாபின் கமலா பசின் என்பவர் புற்றுநோயுடனான தனது போராட்டத்தில் உயிரிழந்தார்.
    • புகழ்பெற்றக் கவிஞரும் எழுத்தாளருமான இவர் பாலினக் கோட்பாடு மற்றும் பெண்ணியம் குறித்து பல புத்தகங்களை எழுதியுள்ளார்.
  • 99வது இராணுவப் பொறியியல் பணிகள் நிறுவன தினமானது 2021 ஆம் ஆண்டு செப்டம்பர் 26 அன்று அனுசரிக்கப் பட்டது.
    • இராணுவப் பொறியியல் பணிகளானது பாதுகாப்புத் துறை அமைச்சகத்துடன் தொடர்புடைய அமைப்புகள் மற்றும் ஆயுதப் படைகளுக்கு பின்னணியிலான ஆதரவினை வழங்குகிறது.
  • ஐக்கிய நாடுகள் அமைப்பினால் நிர்ணயிக்கப்பட்ட உலகளாவியத் தகவல் அணுகலுக்கான சர்வதேச தினமானது ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 28 அன்று அனுசரிக்கப் படுகின்றது.
    • இந்த ஆண்டுக்கான இத்தினத்தின் கருத்துரு, “The Right to know – Building Back Better with Access to Information” என்பதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்