TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

October 1 , 2021 1060 days 544 0
  • சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகமானது முதியோர்களுக்காக “Elder line” எனப்படும் ஒரு இந்திய அளவிலான உதவி எண்ணினை வெளியிட்டுள்ளது.
    • இதற்கான இலவச உதவி எண் ஆனது 14567 ஆகும்.
  • ராஜஸ்தான் மாநிலத்தில் தயாரிக்கப்படும் சோஜத் மெஹந்தி எனும் மருதாணிக்கு புவிசார் குறியீடானது வழங்கப் பட்டுள்ளது.
    • சோஜத் என்னுமிடத்தில் வளர்க்கப்படும் மெஹந்தி இலைகளிலிருந்து உருவாக்கப் படும் சோஜத் மெஹந்தியானது இயற்கையான முறையில் மழைநீரைப் பயன்படுத்திப் பயிரிடப் படுகிறது.
  • சென்னை எழும்பூரிலுள்ள பழைய காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் தமிழக காவல்துறை அருங்காட்சியகமானது அமைக்கப் பட்டுள்ளது.
    • இந்தக் கட்டிடமானது 1856 ஆம் ஆண்டில் சென்னையின் முதல் காவல் ஆணையராக இருந்த  லெப்டினன்ட் கர்னல் ஜான் கார்ன் போல்டர்சன் என்பவரின் தலைமையகமாக இருந்தது.
  • நாசாவின் ஆய்வுக்கலனான இன்சைட் செவ்வாய்க் கிரகத்தில் 4.2 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஒன்றரை மணி நேரத்திற்கும் மேலாக அங்கு உணரப்பட்டதைக் கண்டறிந்தது.
    • இது செவ்வாய்க் கிரகத்தில் பதிவான மிகப்பெரிய மற்றும் ஒரு நீண்ட நேர நிலநடுக்கமாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்