TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

October 4 , 2021 1057 days 506 0
  • இம்பாலிலுள்ள ஜவஹர்லால் நேரு மணிப்பூர் நடன அகாடமி (JNMDA) மண்டபத்தில் நாத – சங்கீர்த்தன விழா தொடங்கியது.
    • இது மூன்று நாள் அளவிலான ஒரு இசை மற்றும் நடன விழாவாகும்.
  • தாலிபன்கள் 1964 ஆம் ஆண்டின் ஆப்கானிஸ்தான் அரசியலமைப்பிலிருந்து ஷரியா அல்லது இஸ்லாமியச் சட்டத்துடன் முரண்படாத சில விதிகளைத் தற்காலிக அடிப்படையில் சட்டமாக்க உள்ளதாக அறிவித்துள்ளனர்.
    • இந்த அரசியலமைப்பினை ஏற்பதனால் பெண்களுக்கு தற்சமயம் வாக்குரிமை வழங்கப் படும்.
  • 2021 ஆம் ஆண்டு செப்டம்பர் 30 அன்று ஹவாய் நாட்டின் பெருந்தீவில் (Big Island) உள்ள கிலாவ்யா என்ற எரிமலை வெடித்தது.
    • புவியிலுள்ள அதிகம் செயல்பாட்டிலிருக்கும் எரிமலைகளுள் இதுவும் ஒன்றாகும்.
  • பூடான் நாட்டிற்காக ஒரு சிறிய செயற்கைக்கோளை உருவாக்குவதற்காக வேண்டி  கூட்டு உற்பத்தி மீதான ஓர் அமலாக்க ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்திட்டுள்ளது.
    • இந்த ஒப்பந்தமானது இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பு மற்றும் பூடான் நாட்டின் தகவல் தொழில்நுட்பம் மற்றும் தொலைத்தொடர்புத் துறை ஆகியவற்றிற்கு இடையே கையெழுத்தானது.
  • இந்தியாவில் 10 கோடி அளவிலான கோவிட்-19 தடுப்பூசிகளைச் செலுத்திய முதல் மாநிலமாக உத்தரப்பிரதேசம் உருவெடுத்துள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்