TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

October 5 , 2021 1056 days 612 0
  • தமிழக நிதித் துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அமைச்சர்கள் குழுவின் ஒரு உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார்.
    • இந்த அமைச்சர்கள் குழுவானது GST அமைப்பில் சீர்திருத்தங்களை மதிப்பிடச் செய்வதற்காக GST சபையினால் அமைக்கப்பட்டதாகும்.
  • பிரதமர் நரேந்திர மோடி சிறப்பம்சங்களைக் கொண்ட 35 பயிர் வகைகளை நாட்டிற்கு என்று அர்ப்பணித்தார்.
    • இந்தப் புதிய பயிர் வகைகள் பருவநிலை மாற்றம் மற்றும் ஊட்டச்சத்துக் குறைபாடு போன்ற பெரிய பிரச்சினைகளை எதிர்கொள்வதில் உதவுவதை நோக்கமாகக் கொண்டு அறிமுகப் படுத்தப்பட்டுள்ளது.
  • MSD பார்மாசியூட்டிகல்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனமானது கார்டாசில் – 9 எனப்படும் இந்தியாவின் முதல் பாலினம் சாராத, மனித பாப்பிலாமா வைரஸ் தடுப்பூசியினை வெளியிடுவதாக அறிவித்தது.
    • இந்தத் தடுப்பூசியினால் HPV வகைகளால் ஏற்படும் நோய்த் தொற்றினையும் புற்றுநோய்களையும் இதன் மூலம் குறைக்க உதவும்.
  • சான் மரினோ நாடானது கருக்கலைப்பினைச் சட்டப்பூர்வமாக்குவதற்கான ஒரு வரலாற்றுச் சிறப்பு மிக்க வாக்கெடுப்பில் அதற்குச் சாதகமாக வாக்களித்தது.
    • எந்தவொரு சூழ்நிலையின் கீழும் கருக்கலைப்பினை முற்றிலுமாக தடை செய்த கடைசி நாடுகளுள் ஒன்று மரினோ என்பதால் இந்த வாக்கெடுப்பு ஒரு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததாகும்
  • இந்திய நாட்டில் ஒவ்வோர் ஆண்டும் அக்டோபர் 02 அன்று தேசிய போதைப்பொருள் எதிர்ப்புத் தினமானது அனுசரிக்கப்படுகிறது.
    • இந்தியாவில் போதைப்பொருளுக்கு அடிமையாதல் மற்றும் அவற்றின் தவறான பயன்பாடு குறித்த ஒரு விழிப்புணர்வினை ஏற்படுத்துவதற்காக இத்தினமானது அனுசரிக்கப் படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்