TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

May 13 , 2018 2259 days 749 0
  • இந்தியாவின் முதல் பட்டியலிடப்பட்ட, அகமதாபாத்தைச் சேர்ந்த வணிக நிறுவனமான இன்பைபீம் (Infibeam), மேக அடிப்படையிலான சரக்கு மேலாண்மை நிறுவனமான (Cloud-based inventory management company) யுனிகாமர்ஸை வாங்க உள்ளது. இன்பைபீம், விருப்பமான மாற்றக்கூடிய கடன் பத்திரங்களின் (Optional convertible debentures - OCD) முன்னுரிமைகளை ஸ்நாப்டீலுக்கு வழங்கும்.
    • யுனிகாமர்ஸ் நிறுவனமானது ஸ்நாப்டீல் நிறுவனத்தால் முழுவதும் உரிமை கொள்ளப்பட்ட துணை நிறுவனம் ஆகும்
  • இந்திய ஆயில் நிறுவனத்திற்குப் பிறகு, மத்திய அரசால் உரிமை கொள்ளப்பட்ட இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட், வீட்டிற்கே சென்று டீசலை வழங்கும் முறையை மும்பையில் தொடங்கியுள்ளது. அதோடு, இத்திட்டத்தை நாட்டின் பிற பகுதிகளிலும் விரிவுபடுத்த திட்டமிட்டுள்ளது.
  • வங்கதேசம், இஸ்லாமிய கூட்டுறவிற்கான நிறுவனத்தின் (Organisation of Islamic Cooperation – OIC) சாசனத்தை மறுகட்டமைப்பு செய்வதற்கு முன்மொழிந்துள்ளது. இந்த மறுகட்டமைப்பானது, இந்தியா போன்ற இஸ்லாமியர் பெரும்பான்மையல்லாத நாடுகளை (Non-Muslim countries) பார்வையாளர் பட்டியலில் இணைப்பதற்கு வழியமைத்துத் தரும்.
    • OIC என்பது, 57 உறுப்பினர்களைக் கொண்டது. இந்த 57 உறுப்பினர்களும் இஸ்லாமியர் பெரும்பான்மை நாடுகளாகும். OIC –யின் அதிகாரப்பூர்வ மொழிகள்: அரேபியம், ஆங்கிலம் மற்றும் பிரெஞ்சு ஆகும்.
  • TRA-வின் வியாபாரக்குறி நம்பிக்கை அறிக்கை 2018-ன் படி பதஞ்சலி ஆயுர்வேத நிறுவனமானது இந்தியாவின் மிகவும் வேகமாக வளரும் நுகர்வோர் பொருட்களின் குறி (Brand) எனத் தரவரிசையிடப்பட்டுள்ளது.
  • பாரத் எனும் 6 நாள் விழாவை புது தில்லி நடத்த உள்ளது. மாட்சிமையுடைய மற்றும் தொன்மையான இந்திய நாகரிகத்தின் 21-ஆம் நூற்றாண்டின் பாராட்டுரைகள் (Tributes) எனக் கருதப்படும் இந்த நிகழ்ச்சி கலைகளுக்கான இந்திரா காந்தி தேசிய மையத்தில் நடைபெறும்.
  • மாஸ்கோவிலுள்ள ஆர்ரேட் கிரம்ளின் அரங்கத்தில் நடைபெற்ற பதவியேற்பு நிகழ்ச்சியில் திரு. விளாமிடிர் புதின் ரஷ்யாவின் அதிபராக பதவியேற்றுக் கொண்டார். இது புதினின் 4-வது ஆட்சிக் காலமாகும்.அதிபராக பதவியேற்ற பிறகு, 2012-லிருந்து பிரதமர் பதவியை வகித்து வந்த டிமிட்ரி மெட்வெடெவ்வை புதின் பிரதமராக அறிவித்துள்ளார்.
  • கொல்கத்தாவிலுள்ள நந்தன் திரைப்பட மற்றும் கலாச்சார மையத்தில் திரைப்பட விழாவை ஜூலை 2018-ல் சீனா நடத்தும் என சீனமக்கள் குடியரசிற்கான துணைத் தூதர் (Counsel General) திரு. மா ஜான்வு தெரிவித்துள்ளார்.
  • 30-வது கடற்படை உயர் கட்டளை பயிற்சிக்கான நிறைவு விழா வெரெத்திலுள்ள (Verem) INS மன்தோவி எனும் கடற்படை போர் பயிற்சி கல்லூரியில் நடைபெற்றது.
    • கடற்படை போர் பயிற்சி என்பது இந்தியக் கடற்படையின் முன்னணி பயிற்சி நிறுவனம் மற்றும் இந்திய ஆயுதப்படைப் பிரிவின் மூன்று போர் பயிற்சிக் கல்லூரிகளில் ஒன்றாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்