TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

October 15 , 2021 1046 days 515 0
  • மத்திய சிறுபான்மையினர் விவகாரங்கள் துறை அமைச்சரான  முக்தார் அப்பாஸ் நக்வி 2022 ஆம் ஆண்டு ஹஜ் செயல்முறை முழுவதும் 100% டிஜிட்டல் மயமாக்கப் படும் எனக் கூறினார்.
    • இந்தோனேசியாவிற்குப் பிறகு அதிக எண்ணிக்கையிலான ஹஜ் யாத்திரைப் பயணிகள் இந்தியாவிலிருந்துச் செல்கின்றனர்.
  • செபாஸ்டியன் குர்ஸ் ராஜினாமா செய்ததையடுத்து அலெக்சாண்டர் செல்லன்பர்க் என்பவர் ஆஸ்திரிய நாட்டின் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
    • லஞ்ச ஊழலில் ஈடுபட்டதன் காரணமாக செபாஸ்டியன் குர்ஸ் ராஜினாமா செய்தார்.
  • ராஜஸ்தான் அரசானது சமீபத்தில் தான் நிறைவேற்றிய திருமணப் பதிவு மசோதாவினை மறுபரிசீலனை செய்வதற்காக அதனைத் திரும்பப் பெற முடிவு செய்துள்ளது.
    • இந்த மசோதாவின் விதிகள் குழந்தைத் திருமணங்களை ஊக்குவிக்கும் என்பதைக் கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கையானது மேற்கொள்ளப் படுகிறது.
  • முன்னாள் இந்திய குடிமைப்பணி அதிகாரி அமித் காரே, பிரதமர் நரேந்திர மோடி அவர்களுடைய ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார்.
    • இவரது பதவிக் காலம் 2 ஆண்டுகளாகும்.
  • கோவிட்-19 மீதான நிபுணர் குழுவானது பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவாக்சின் என்ற தடுப்பு மருந்தினை 2 வயது முதல் 18 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்குச் செலுத்துவதற்காக அதன் அவசரகாலப் பயன்பாட்டிற்கு ஒப்புதல் வழங்கியுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்