இந்திய காப்பீட்டு ஒழுங்குமுறை ஆணையத்தின் தலைவராக சுபாஷ் சி. குந்தியா பொறுப்பேற்றுள்ளார்.
இந்திய மின் வணிக தளமான (e-commerce platform) பிளிப்கார்ட்டின் பெரும்பான்மையான பங்குகளைப் பெற்று அமெரிக்க வணிக நிறுவனமான வால்மார்ட் உலகின் மிகப்பெரிய வணிக ஒப்பந்தத்தை முடித்துக் கொண்டுள்ளது.
கிடைக்கப்பெற்ற தகவல்களின்படி பிளிப்கார்ட்டின் 77% பங்குகளை வால்மார்ட் வாங்க உள்ளது. இதன் மதிப்பு 16 பில்லியன் டாலர்கள் ஆகும். பிளிப்கார்ட் பங்குகளின் மொத்த மதிப்பு8 பில்லியன் டாலர்கள் ஆகும்.
பிரபல பயிற்சியாளர் மற்றும் நடுவரான (Umpire) திரு. அருண் பரத்வாத் கிரிக்கெட்டின் மேன்மைக்கான மையத்தின் (Centre for Excellence of Cricket) தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
கூகுள் கிளவுட் இந்தியா (Google Cloud India) நிறுவனமானது இந்தியாவில் நடைபெறும் வணிகங்களுக்கான மேகதள சேவைகள் (Cloud Platform Services) ஆகும். இதன் தலைவராக நிர்தின் பவன்குலேவை கூகுள் நிறுவனம் நியமித்துள்ளது.
2018-ஆம் ஆண்டின் உலக ரோபோ மாநாடு வரும் ஆகஸ்ட் மாதம் பெய்ஜிங்கில் நடைபெற உள்ளது. 10-க்கும் மேற்பட்ட நாடுகளிலிருந்து 12000-க்கும் மேற்பட்ட அணிகள் மற்றும் பங்கேற்பாளர்கள் இம்மாநாட்டில் பங்கேற்பர்.
பட்ஜெட் கட்டுப்பாடுகள் மற்றும் அறிவியலுக்கான பட்ஜெட்டின் மீதான அதிக முன்னுரிமைகள் ஆகியவற்றை காரணங்களாகக் காட்டி நாசாவின் கார்பன் கண்காணிப்பு அமைப்பு (Carbon Monitoring System – CMS) திட்டத்தை அமெரிக்க அரசு ரத்து செய்துள்ளது.
நாசாவின் CMS திட்டமானது, உலக வெப்பமயமாதலுக்கு முக்கியக் காரணமாக காணப்படுகின்ற பசுமை இல்ல வாயுக்களான கார்பன் மற்றும் மீத்தேனை கண்காணிக்கும் ஒரு திட்டமாகும்.
பொதுத்துறை வங்கியான தேனா வங்கியை, ரிசர்வ் வங்கி தன்னுடைய உடனடி சரிபார்ப்பு நடவடிக்கைக் கட்டமைப்பில் (Prompt Corrective Action Framework - PCA) இணைத்துள்ளது.
பெருகிவரும் வாராக்கடன் மற்றும் அதிகளவிலான இழப்புகள் ஆகியவற்றின் காரணமாக தேனா வங்கியின் நிதியில் ஆரோக்கியம் சரிவடைந்து வருவதை கருத்தில் கொண்டு புதிய கடன் வழங்குதலிலிருந்து தேனா வங்கியை ரிசர்வ் வங்கி தடை செய்துள்ளது.
இத்தடையினால், PCA–வின் கீழ் தடையை சந்திக்கும் முதல் வங்கி தேனா வங்கியாகும்.
ஒடிசாவின் கென்துஜ்ஹர் மாவட்டத்தின் சம்புவா பகுதியின் சிங்புங்கில் உள்ள பாறைமாதிரிகளிலிருந்து உலகின் இரண்டாவது பழமையான மாக்மாட்டின் சிர்கோனியத்தின் படிவுகளை (Grains of Magmatic Zones) விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
இந்த படிவுகள் கதிரியக்க ஐசோடோப்புகளின் பண்புகளைக் கொண்ட கனிமங்களாகும். இந்தப் பாறையானது, 4240 மில்லியன் ஆண்டுகள் பழமையானதாகும். இது மிகவும் பழமையான புவியில் காணப்படும் மாக்மாட்டிக் சிர்கோனியம் ஆகும்.