TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

October 21 , 2021 1040 days 568 0
  • குழந்தைகள் மற்றும் இளம் பருவத்தினரிடையே மனநலம் குறித்து ஒரு  விழிப்புணர்வினை ஏற்படுத்துவதன் மூலம் மனநலம் குறித்த தவறான கருத்துகளை உடைத்தெறிவதற்காக சர்வதேச கிரிக்கெட் சபை மற்றும் யுனிசெஃப் ஆகியவை ஒன்றிணைந்துச் செயல்பட முடிவு செய்துள்ளள.
    • ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஓமன் ஆகிய நாடுகளில் நடைபெற உள்ள 2021 ஆடவர் T20 உலகக் கோப்பைப் போட்டியை முன்னிட்டு இந்த முடிவானது மேற்கொள்ளப் பட்டுள்ளது.
  • 2வது கடற்படைத் தளபதிள் மாநாடானது (2021) சமீபத்தில் புதுடெல்லியில் தொடங்கப் பட்டது.
    • இந்த மாநாடானது முக்கியச் செயல்பாடுகள், சாதனங்கள், தளவாடங்கள், மனித வள மேம்பாடு, பயிற்சி மற்றும் நிர்வாகச் செயல்பாடுகள் போன்றவற்றை மதிப்பீடு செய்வதற்கானதாகும்.
  • R. பிரக்ஞானந்தா, அமெரிக்காவைச் சேர்ந்த கிறிஸ்டோபர் யூவ் என்பவரைத் தோற்கடித்து ஜுலியஸ் பேர் சேலஞ்சர்ஸ் செஸ் போட்டியில் வெற்றி பெற்றுள்ளார்.
  • NATO அமைப்பிற்கான (வடக்கு அட்லாண்டிக் ஒப்பந்த அமைப்பு) தனது பணிகளை நிறுத்துவதாக ரஷ்யா அறிவித்தது.
  • மத்திய வான்வழிப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ஜோதிராதித்ய M. சிந்தியா 6 விமான வழித் தடங்களைக் காணொளி வாயிலாக திறந்து வைத்தார்.
    • அந்த 6 விமான வழித் தடங்களாவன; கொல்கத்தாகவுகாத்தி, கவுகாத்தி-ஐஸ்வால், ஐஸ்வால்-ஷில்லாங், ஷில்லாங்-ஐஸ்வால், ஐஸ்வால்-கவுகாத்தி மற்றும் கவுகாத்திகொல்கத்தா ஆகியன.
  • ஒரு கப்பலிலிருந்து மற்றொரு கப்பலுக்கு நீர்மப் பெட்ரோலிய வாயுவினை (LPG) பரிமாற்றும் நடவடிக்கையானது முதன்முறையாக இந்தியக் கடற்கரைப் பகுதியில் கொல்கத்தாவில் பாரத் பெட்ரோலிய கழக நிறுவனத்தினால் மேற்கொள்ளப் பட்டது.
    • கொல்கத்தாவில் மேற்கொள்ளப்பட்ட இந்தப் பரிமாற்றமானது கணிசமான அளவில் அந்நிய செலாவணியைச் சேமிப்பதில் வர்த்தகத் துறைக்கும் நமது நாட்டிற்கும் பயனளிக்கும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்