TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

October 23 , 2021 1038 days 426 0
  • ஜப்பானிலுள்ள அசோ எரிமலையானது சமீபத்தில்  வெடித்துச் சிதறியது.
    • அசோ எரிமலையானது ஜப்பானிலுள்ள மிகப்பெரிய செயல்பாட்டில் உள்ள ஒரு எரிமலையாகும்.
  • முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் “TRUTH Social” எனப்படும் தனது சொந்தச் சமூக ஊடகத்தினை தொடங்கியுள்ளார்.
    • பேஸ்புக் மற்றும் டிவிட்டர் பக்கங்களில் டொனால்ட் டிரம்பின் கணக்குகள் தடை செய்யப் பட்டதைத் தொடர்ந்து இந்த ஊடக தளமானது தொடங்கப்பட்டது.
  • ஈக்வெடார் நாட்டு அதிபர் கில்லர்மோ லாசோ தென் அமெரிக்காவில் 60 நாட்களுக்கு நெருக்கடி நிலையை அறிவித்துள்ளார்.
    • தீவிரமான போதைப்பொருள் சார்ந்த குற்றங்கள் அதிகரித்து வருவதன் காரணமாக இந்த நடவடிக்கையானது மேற்கொள்ளப்பட்டது.
  • தென்கொரிய நாடானது உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட தனது முதல் விண்வெளி ராக்கெட்டினைச் சோதனைக்கு உட்படுத்தியது.
    • முழுவதுமாக உள்நாட்டுத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி கட்டமைக்கப் பட்டநூரிஎன்பது தென்கொரிய நாட்டின் முதலாவது ஏவுகலமாகும்.
  • ஒவ்வோர் ஆண்டும் அக்டோபர் 20 ஆம் தேதியன்று சர்வதேச வான்வழிப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டாளர் தினமானது அனுசரிக்கப்படுகிறது.
    • வான்வழிப் பயணத்தினைப் பாதுகாப்பாக வைப்பதற்கு கடினமாக உழைக்கும் நபர்களை அங்கீகரித்து பாராட்டுவதற்காக வேண்டி இத்தினமானது அனுசரிக்கப் படுகிறது.
  • இந்திய நாடானது முதலாவது மற்றும் 2வது தவணை உள்பட 100  கோடி கோவிட் தடுப்பூசிகளை செலுத்தியுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்