TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

May 16 , 2018 2256 days 720 0
  • இந்திய காப்பீட்டு ஒழுங்குமுறை ஆணையத்தின் தலைவராக சுபாஷ் சி. குந்தியா பொறுப்பேற்றுள்ளார்.
  • இந்திய மின் வணிக தளமான (e-commerce platform) பிளிப்கார்ட்டின் பெரும்பான்மையான பங்குகளைப் பெற்று அமெரிக்க வணிக நிறுவனமான வால்மார்ட் உலகின் மிகப்பெரிய வணிக ஒப்பந்தத்தை முடித்துக் கொண்டுள்ளது.
    • கிடைக்கப்பெற்ற தகவல்களின்படி பிளிப்கார்ட்டின் 77% பங்குகளை வால்மார்ட் வாங்க உள்ளது. இதன் மதிப்பு 16 பில்லியன் டாலர்கள் ஆகும். பிளிப்கார்ட் பங்குகளின் மொத்த மதிப்பு8 பில்லியன் டாலர்கள் ஆகும்.
  • பிரபல பயிற்சியாளர் மற்றும் நடுவரான (Umpire) திரு. அருண் பரத்வாத் கிரிக்கெட்டின் மேன்மைக்கான மையத்தின் (Centre for Excellence of Cricket) தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
  • கூகுள் கிளவுட் இந்தியா (Google Cloud India) நிறுவனமானது இந்தியாவில் நடைபெறும் வணிகங்களுக்கான மேகதள சேவைகள் (Cloud Platform Services) ஆகும். இதன் தலைவராக நிர்தின் பவன்குலேவை கூகுள் நிறுவனம் நியமித்துள்ளது.
  • 2018-ஆம் ஆண்டின் உலக ரோபோ மாநாடு வரும் ஆகஸ்ட் மாதம் பெய்ஜிங்கில் நடைபெற உள்ளது. 10-க்கும் மேற்பட்ட நாடுகளிலிருந்து 12000-க்கும் மேற்பட்ட அணிகள் மற்றும் பங்கேற்பாளர்கள் இம்மாநாட்டில் பங்கேற்பர்.
  • பட்ஜெட் கட்டுப்பாடுகள் மற்றும் அறிவியலுக்கான பட்ஜெட்டின் மீதான அதிக முன்னுரிமைகள் ஆகியவற்றை காரணங்களாகக் காட்டி நாசாவின் கார்பன் கண்காணிப்பு அமைப்பு (Carbon Monitoring System – CMS) திட்டத்தை அமெரிக்க அரசு ரத்து செய்துள்ளது.
    • நாசாவின் CMS திட்டமானது, உலக வெப்பமயமாதலுக்கு முக்கியக் காரணமாக காணப்படுகின்ற பசுமை இல்ல வாயுக்களான கார்பன் மற்றும் மீத்தேனை கண்காணிக்கும் ஒரு திட்டமாகும்.
  • பொதுத்துறை வங்கியான தேனா வங்கியை, ரிசர்வ் வங்கி தன்னுடைய உடனடி சரிபார்ப்பு நடவடிக்கைக் கட்டமைப்பில் (Prompt Corrective Action Framework - PCA) இணைத்துள்ளது.
    • பெருகிவரும் வாராக்கடன் மற்றும் அதிகளவிலான இழப்புகள் ஆகியவற்றின் காரணமாக தேனா வங்கியின் நிதியில் ஆரோக்கியம் சரிவடைந்து வருவதை கருத்தில் கொண்டு புதிய கடன் வழங்குதலிலிருந்து தேனா வங்கியை ரிசர்வ் வங்கி தடை செய்துள்ளது.
    • இத்தடையினால், PCA–வின் கீழ் தடையை சந்திக்கும் முதல் வங்கி தேனா வங்கியாகும்.
  • ஒடிசாவின் கென்துஜ்ஹர் மாவட்டத்தின் சம்புவா பகுதியின் சிங்புங்கில் உள்ள பாறைமாதிரிகளிலிருந்து உலகின் இரண்டாவது பழமையான மாக்மாட்டின் சிர்கோனியத்தின் படிவுகளை (Grains of Magmatic Zones) விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
    • இந்த படிவுகள் கதிரியக்க ஐசோடோப்புகளின் பண்புகளைக் கொண்ட கனிமங்களாகும். இந்தப் பாறையானது, 4240 மில்லியன் ஆண்டுகள் பழமையானதாகும். இது மிகவும் பழமையான புவியில் காணப்படும் மாக்மாட்டிக் சிர்கோனியம் ஆகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்