YES வங்கி “வாழ்வாதாரம் மற்றும் நீர் பாதுகாப்பு” எனும் தன்னுடைய பெரு நிறுவன சமூகப் பொறுப்புடைமைத் தொடக்கத்தின் கீழ் ஹரியானா மற்றும் இராஜஸ்தானிலுள்ள விவசாயிகளுக்கான திறன் உருவாக்கத் திட்டத்தை (Capacity Building Project) செயல்படுத்தியுள்ளது.
இந்தியாவின் தேசிய தர நிர்ணய ஆணையமான இந்திய தர நிர்ணய ஆணையம் (Bureau of Indian Standards - BIS) டிஜிட்டல் துறையில் உள்ள பிரச்சினைகள் மற்றும் சவால்கள் ஆகியவற்றைப் பற்றி ஆலோசிக்க புது தில்லியில் டிஜிட்டல் துறையை தரப்படுத்துதல் மீதான CxO மன்றத்தை நடத்தியது.
சிக்கிம் மாநில அரசு பாலிவுட் பாடகரான மோஹித் சவுகானை, சிக்கிமை பசுமைக்கான இடமாக (Destination) தேசிய அளவிலும், சர்வதேச அளவிலும் ஊக்குவிப்பதற்காக தன்னுடைய பசுமைத் தூதராக நியமித்துள்ளது.
தற்போது, புதுதில்லியிலுள்ள மத்திய வெளியுறவு அமைச்சகத்தில் இணைச் செயலாளராகப் பணியாற்றி வரும் திரு.முன்மஹாவர் (IFS : 1996) ஓமன் நாட்டிற்கான இந்தியாவின் அடுத்த தூதராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்திய அரசின் டிஜிட்டல் இந்தியா முயற்சியினை ஒரு படி முன்னெடுத்துச் சென்று முதல்முறையாக விமானிகளைத் தேர்ந்தெடுப்பதற்கான (Airmen Recruitment) தேர்வானது ஆன்லைன் மூலமாக நடத்தப்பட்டது.
இத்தேர்வானது, மத்திய மின்னணு மற்றும் தொழில்நுட்ப அமைச்சகத்தின் கீழ் செயல்படும் இந்திய அரசு நிறுவனமான புனேவிலுள்ள மேம்படுத்தப்பட்ட கணக்கீட்டின் மேம்பாட்டிற்கான மையத்தின் (Centre for Development of Advanced Computing - CDAC) கூட்டிணைவோடு விமானப்படையால் நடத்தப்பட்டது.
முப்படைகளில் ஆன்லைன் மூலமாக பணியாளர்களை தேர்வு செய்வது இதுவே முதல் முறையாகும்.
அமெரிக்காவின் பெருமைமிகு ஸ்டான்ஃபோர்டு பல்கலைக்கழகம், ஜப்பானிய மூளைக்காய்ச்சல் (Japanese Encephalitis - JE)) மற்றும் தீவிர மூளைக்குறைப்பாட்டு நோய் (Acute Encephalitis Syndrome - AES) போன்ற நீடித்த நோய்களை தடுப்பதற்கு உத்திரப்பிரதேச மாநிலத்திற்கு உதவிபுரிய ஒப்புக் கொண்டுள்ளது.
ஐக்கிய பேரரசு பல்கலைக்கழகங்களின் மூன்று இந்திய மாணவர்களான சவுமியா சக்சேனா, ருச்சி ஷா மற்றும் சுஷாந்த் தேசாய் ஆகியோருக்கு முறையே தொழிற்முறை வெற்றி விருது, சமுதாய தாக்கங்களுக்கான விருது மற்றும் தொழில் முனைவோர் விருது வழங்கப்பட்டுள்ளது.
இவ்விருதுகள், இங்கிலாந்து நாட்டிற்கு இவர்களுடைய சிறப்பான சாதனைகள் மற்றும் பங்களிப்பு ஆகியவற்றிற்காக பிரிட்டிஷ் கவுன்சிலால் வழங்கப்பட்டுள்ளது.
Block 5 எனும் மேம்படுத்தப்பட் ஃபால்கன் 9 பதிப்பைச் சேர்ந்த ராக்கெட்டானது ஜூன் 2010ல் அறிமுகப்படுத்தப்பட்டது முதல் ஸ்பேஸ் எக்ஸ் (Space X) நிறுவனம் இதன் மீதான மேம்பாட்டு செயல்பாடுகளை செய்துவருகிறது.
ஃபால்கன் 9 ராக்கெட்டை விட இரு மடங்கு ஆற்றல் வாய்ந்த இந்த Block 5 ராக்கெட்டுகள் சுற்றுவட்டப் பாதையில் நிலைநிறுத்தப்படும் ராக்கெட் வகையின் கடைசி பதிப்பு ஆகும்.
இந்திய சுங்கத்துறையும், இந்திய அஞ்சல்துறையும் அஞ்சல் வழியாலான ஏற்றுமதி மற்றும் இறக்குமதிகளை நெறிப்படுத்துதல் மீது விவாதம் மேற்கொள்வதற்காக புதுதில்லியிலுள்ள விக்ஞான்பவனில் முதன்முறையாக கூட்டு மாநாட்டை (Joint Conference) நடத்தின.
தேசிய வெப்ப ஆற்றல் கழகமானது (National Thermal Power Corporation - NTPC) பீகார் மாநிலத்திலுள்ள ஆற்றல் துறையின் செயல்பாட்டை ஊக்குவிப்பதற்காக பீகார் அரசுடன் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தை செய்துள்ளது. இந்த ஒப்பந்தமானது மாநிலத்திலுள்ள மூன்று ஆற்றல் நிலையங்களை NTPCக்கு மாற்றுவதற்கு உதவி புரிகிறது.
NTPC ஆனது, ஆற்றல் அமைச்சகத்தின் கீழ் செயல்படும் இந்தியாவிலுள்ள ஏழு மகாரத்னா நிறுவனங்களுள் ஒன்றாகும்.