TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

November 4 , 2021 1026 days 474 0
  • மைக்ரோசாப்ட் கார்ப்பரேசன் நிறுவனமானது ஆப்பிள் நிறுவனத்தை விஞ்சி சந்தை மூலதனத்தில் உலகின் மிகவும் மதிப்புமிக்க ஒரு பொது வர்த்தக நிறுவனமாக மாறி உள்ளது.
  • மத்திய அமைச்சர் டாக்டர். ஜிதேந்திர சிங் உத்தரகாண்டின் முசௌரியிலுள்ள லால் பகதூர் சாஸ்திரி தேசிய நிர்வாகப் பயிற்சி நிறுவனத்தில் சர்தார் படேல் தலைமைத்துவ மையத்தினைத் திறந்து வைத்தார்.
    • இந்த வசதி மையமானது 2021 ஆம் ஆண்டு அக்டோபர் 31 அன்று நடைபெற்ற ராஷ்டிரிய ஏக்தா திவாஸ் அன்று திறந்து வைக்கப் பட்டது.
  • ஆசிய மேம்பாட்டு வங்கியானது இந்தியாவின் தேசியத் தொழில்துறை வழித்தட மேம்பாட்டுத் திட்டத்திற்கு உதவி வழங்குவதற்காக 250 மில்லியன் டாலர் கடனுக்கு (ரூ.1575 கோடி) ஒப்புதல் வழங்கியுள்ளது.
    • இது 17 மாநிலங்களில் 11 தொழில்துறை வழித்தடங்களை உருவாக்குவதற்காக 500 மில்லியன் டாலர் கடன் வழங்கும் திட்டத்தின் முதல் துணைத் திட்டமாகும்.
  • தேசிய சிறியத் தீப்பெட்டித் தயாரிப்பாளர்கள் சங்கமானது ஒரு தீப்பெட்டியின் விலையை 1 ரூபாயிலிருந்து 2 ரூபாயாக உயர்த்தியுள்ளது.
    • 2007 ஆம் ஆண்டில் ஒரு தீப்பெட்டியின் விலையானது 50 பைசாவிலிருந்து 1 ரூபாயாக உயர்த்தியதற்குப் பிறகு 14 ஆண்டுகள் கழித்து இந்த விலை உயர்வானது அறிவிக்கப் பட்டுள்ளது.
  • உலக சைவ உணவுப் பழக்கத் தினமானது ஒவ்வோர் ஆண்டும் நவம்பர் 1 அன்று அனுசரிக்கப் படுகிறது.
    • மனிதர்கள், மனித இனத்தைச் சாரா விலங்குகள் மற்றும் இயற்கை சூழல்களுக்கு சைவ உணவுப் பழக்கத்தால் ஏற்படும் நன்மைகளைப் பரப்பும் நோக்கத்துடன் இத்தினம் அனுசரிக்கப் படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்