TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

November 7 , 2021 1023 days 446 0
  • அமெரிக்க உயிரித் தொழில்நுட்ப நிறுவனமான நோவாவாக் தயாரித்த கோவிட் – 19 தடுப்பு மருந்தினை இந்தோனேசியாவில் பயன்படுத்துவதற்காக வேண்டி அந்த நிறுவனம் முதன்முறையாக அதன் அவசரகாலப் பயன்பாட்டிற்கு ஒப்புதலைப் பெற்றுள்ளது.  
    • இந்தத் தடுப்பு மருந்தானது இந்தியாவின் சீரம் நிறுவனத்தினால் தயாரிக்கப்பட்டு கோவோவாக்ஸ் என்ற பெயரில் இந்தோனேசியாவில் விற்பனை செய்யப்படும்.
  • பத்திரிக்கையாளர்களுக்கு எதிரான குற்றங்களுக்கான தண்டனையை முடிவிற்குக் கொண்டு வருவதற்கான தினமானது நவம்பர் 02 அன்று அனுசரிக்கப்பட்டது.
    • பத்திரிக்கையாளர்களின் மரபு மற்றும் சாதனைகளை நினைவு கூறவும், அவர்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட குற்றங்களுக்கு நீதி கோரியும் வேண்டி இத்தினமானது அனுசரிக்கப்படுகிறது. 
  • உலகின் பல்வேறு நாடுகளில் அக்டோபர் 31 அன்று ஹாலோவீன் தினமானது கொண்டாடப் படுகிறது.
  • 104 வயதான ஷியாம் சரண் நேஹி இந்தியாவின் மிக வயதான வாக்காளராக கருதப் படுகிறார்.
    • இவர் சமீபத்தில் இமாச்சலப் பிரதேசத்திலுள்ள மாண்டி என்ற நாடாளுமன்றத் தொகுதிக்கான  இடைத் தேர்தலில் வாக்களித்தார்.
  • களிமண்ணைப் பயன்படுத்திப் பட்டாசு தயாரிக்கும் 400 ஆண்டுகள் பழமையான முறையானது குஜராத்தின் வடோதராவில் ஒரு சிறு மறுமலர்ச்சியைக் கண்டுள்ளது.
    • இந்த வகைப் பட்டாசுகள் கோதிஸ் என்று அழைக்கப் படுகின்றன.      

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்