TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

November 13 , 2021 1017 days 495 0
  • நேபாள ராணுவத் தளபதி பிரபு ராம் சர்மாவுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் இந்திய ராணுவத்தின் கெளரவ ஜெனரல் (இராணுவ தளபதி) பதவியை வழங்கினார்.
    • இரு நாடுகளும் பரஸ்பர ரீதியில் அதன் ராணுவத் தளபதிகளுக்கு ஜெனரல் (இராணுவ தளபதி) பதவியை வழங்குவது ஒரு வழக்கமாகும்.
  • ஆம்வே இந்தியாவின் விளம்பரத் தூதராக அமிதாப் பச்சன் நியமிக்கப்பட்டுள்ளார்.
  • பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் நடைபெற்ற ஒரு டென்னிஸ் போட்டியில், நோவக் ஜோகோவிச் (செர்பியா) டானில் மெட்வடேவை (ரஷ்யா) தோற்கடித்து 37வது மாஸ்டர்ஸ் பட்டத்தை வென்றுள்ளார்.
    • இது அவரது 6வது பாரீஸ் பட்டமாகும்.
  • மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் டுவைன் பிராவோ சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதை உறுதி செய்துள்ளார்.
  • ஒடிசா அரசானது ரக்சக் என்ற பெயரில் ஒரு முதல் வகையான சாலைப் பாதுகாப்புத் திட்டத்தைத் தொடங்கியுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்