TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

May 21 , 2018 2251 days 738 0
  • இலண்டன் நகர தேவாலயத்தின் முதல் பெண் பிஷப்பாக சாராஹ் முல்லால்லி நியமிக்கப்பட்டுள்ளார். இவர் இலண்டன் நகர தேவாலயத்தின் மூன்றாவது மூத்த மதகுரு ஆவார். முல்லால்லி சர்வதேச செவிலியர் தினத்தன்று (ஃபுளோரென்ஸ் நைட்டிங்கேளின் பிறந்த நாள்) இலண்டனின் புனித பால் தேவாலயத்தில் 133-வது பிஷப்பாக நியமிக்கப்பட்டார். இந்நியமனம் பிஷப் முல்லால்லி முன்பு வகித்த வந்த செவிலியர் பதவியின் எதிரொலிப்பாகக் கருதப்படுகிறது.
  • பெருமைமிகு ஹியூகோ விருதுகளுக்கு, தன்னை “பங்க் தலித் பெண்” எனக் கூறிக் கொள்ளும் மிமி மொண்டல் இந்தியாவிலிருந்து முதன் முறையாக பரிந்துரைக்கப்பட்டுள்ளார். இவ்விருதானது அறிவியல் புனைவு/கற்பனையில் (Science fiction or fantasy) சிறந்த எழுத்துப் பணிக்காக ஆண்டுதோறும் வழங்கப்படும் விருது ஆகும். இவருக்கு இவ்விருதானது சிறப்பான தொடர்புடைய வேலைகள் (Best Related works) பிரிவில் வழங்கப்பட்டது.
    • இந்த ஆண்டு “Luminescent Threads Connections to Octavia E Butler” எனும் அறிவியல் புனைவுப் புத்தகத்தின் இணை ஆசிரியராகப் பணியாற்றியமைக்காக மொண்டல் இவ்விருதிற்கு பரிந்துரைக்கப்பட்டார்.
  • இந்த ஆண்டிற்கான கால்பந்து வீரர் விருதிற்கு பிரான்சு நாட்டின் கால்பந்து வீரரான நெய்மர் பெயர் பாரிசில் நடைபெற்ற விழாவில் அறிவிக்கப்பட்டது.
  • தாய்லாந்து நாட்டின் பாங்காக்கில் நடைபெற்ற 14 வயதுக்குட்பட்டோருக்கான ITF ஆசியன் டென்னிஸ் சேம்பியன்ஷிப் போட்டியில் உதித் கோகோய் வெற்றி பெற்றுள்ளார்.
  • டெல்லியின்P.எக்ஸ்டென்சன் பகுதியிலுள்ள மிலன் விஹார் கூட்டுறவு சங்கத்தில் 140 kWp ஆற்றல் கொண்ட சூரியஒளி ஒளி மின்னழுத்த (Photovoltaic) நிலையத்தை டெல்லி முதல்வர் திரு.அரவிந்த் கெஜ்ரிவால் தொடங்கி வைத்தார். முதல் முறையாக இந்த நிலையங்கள் ரெஸ்கோ மாதிரியில் (RESCO model) நிறுவப்பட்டுள்ளன.
    • RESCO – (Renewable Energy service Company) - புதுப்பிக்கக் கூடிய ஆற்றல் சேவை நிறுவனம்.
    • இந்த நிலையமானது டெல்லி அரசின் ஆற்றல் துறை (Department power) மற்றும் இந்திரப்பிரஸ்தா ஆற்றல் உற்பத்தி நிறுவனம் ஆகியவற்றின் கூட்டிணைவால் நிறுவப்பட்டது.
  • வடகிழக்குப் பகுதியின் பாதுகாவலர் என பிரபலமாகக் கருதப்படும் அஸ்ஸாம் ரைஃபிள்ஸின் (Assam Rifles) 20-வது தலைவராக (Director General) லெப்டினன்ட் ஜெனரல் சுஹ்தீப் சங்வான் பொறுப்பேற்றுக் கொண்டுள்ளார்.
  • வன விலங்கு புகைப்படவியலாளரான திரு.லத்திகா நாத் தன்னுடைய “மறைந்துள்ள இந்தியா” (Hidden India) எனும் புத்தகத்தை வெளியிட்டுள்ளார். இது காபி டேபிள் என்ற புத்தக வகையைச் சார்ந்ததாகும். பெரிய அளவிலான விலையுயர்ந்த புத்தகமான இதன் விற்பனையில் கிடைக்கும் வருமானத்தில் பகுதியளவு தொகையானது, வனவிலங்கு SOS யானை பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு மையத்திற்கு வழங்கப்படும். இவ்வுதவியின் நோக்கமானது இந்தியாவிலுள்ள யானைகளின் பாதுகாப்பை ஊக்குவித்தலாகும்.
  • டெல்லியின் சுப்ரோடோ பூங்காவில் அமைந்துள்ள விமானப்படையின் மேற்குத் தலைமையகம் மானுடவியல் மற்றும் பேரிடர் நிவாரணம் மீதான கருத்தரங்கை நடத்தியது. இக்கருத்தரங்கின் நோக்கமானது இந்தியாவின் வடக்கு பகுதிகளில் மானுடவியல் மற்றும் பேரிடர் நிவாரணம்  ஆகியவற்றை சமாளிப்பதற்கான திறனான நடவடிக்கைகளின் மீது கவனம் செலுத்துவதற்காக நடத்தப்படுகிறது.
  • முன்னாள் BCCI தலைவரான ஷாஷாங்க் மனோகர், மற்றொரு இரண்டாண்டு காலத்திற்கு சர்வதேச கிரிக்கெட் சங்கத்தின் தற்சார்புடைய தலைவராக செயல்பட உள்ளார். இவர் சர்வதேச கிரிக்கெட் சங்கத்தின் நிர்வாகக் குழுவினரின் எதிர்ப்பின்றி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். திரு.மனோகர் சர்வதேச கிரிக்கெட் சங்கத்தின் முதல் தற்சார்புடைய   தலைவராக 2016ல் பதவியேற்றார் .
    • தேர்தல் நடைமுறைகளின் படி, ICC (International Cricket Council) தலைவர்கள், (Directors) ஒவ்வொருவரும் ஒரு நபரை உறுப்பினராக நியமிக்கலாம். அந்த நபர்கள் தற்போதைய அல்லது இதற்கு முந்தைய ICC இயக்குநராக இருக்க வேண்டும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்