TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

December 5 , 2021 995 days 531 0
  • டிசம்பர் 06 ஆம் தேதியினை “மைத்ரி திவாஸ்” (நண்பர்கள் தினம்) என்ற தினமாக கொண்டாட இந்தியாவும், வங்காளதேசமும் முடிவு செய்துள்ளன.
    • “மைத்ரி திவாஸ்” என்பது 1971 ஆம் ஆண்டு, டிசம்பர் 06 அன்று வங்காளதேசம் விடுதலை பெறுவதற்கு 10 நாட்களுக்கு முன்பு இந்தியா அதனை அங்கீகரித்த ஒரு தினத்தினைக் குறிக்கிறது.
  • வாரணாசி, புனே, கொல்கத்தா மற்றும் விஜயவாடா விமான நிலையங்கள், முகத்தை அடையாளம் காணும் தொழில்நுட்பம் அடிப்படையிலான அங்க அடையாளத் தொழில் நுட்பம் சார்ந்த நுழைவு முறையை முதன்முதலில் அறிமுகப்படுத்த உள்ளன.
    • இந்திய விமான நிலைய ஆணையமானது டிஜியாத்ரா என்ற கொள்கையின் ஒரு பகுதியாக இத்தொழில்நுட்பத்தினைச் செயல்படுத்துவதற்கு NEC கார்ப்பரேஷன் பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனத்தினை ஈடுபடுத்தியுள்ளது.
  • வாகா எல்லை முதல் டோர்காம் எல்லை வரையில் இந்தியாவினால் வழங்கப்படும் மனித நேய உதவிப் பொருட்களை ஏற்றுக் கொள்வதற்கு ஆப்கானிய நாட்டுச் சரக்கு வாகன உந்துகளுக்கு அனுமதி வழங்கப்படும் என்று பாகிஸ்தான் தெரிவித்துள்ளது.
    • பாகிஸ்தானின் கைபர் மாவட்டத்தில் டோர்காம் எல்லைக் கடவுப்பாதை அமைந்துள்ளது.
  • 2022 ஆம் ஆண்டு பெய்ஜிங் ஒலிம்பிக் மற்றும் பாராலிம்பிக் போட்டிகளுக்காக ஒலிம்பிக் கால தற்காலிகப் போர் நிறுத்தம் கடைபிடிக்கப் படும்.
    • 2022 ஆம் ஆண்டு, பிப்ரவரி 04 அன்று தொடங்கும் ஒலிம்பிக் போட்டிகளுக்கு முந்தைய ஏழு நாட்களிலிருந்து பாராலிம்பிக் போட்டிகள் முடிந்து ஏழு நாட்கள் வரையில் இது கடைபிடிக்கப்படும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்