உலகின் மிகவும் வயதான டெஸ்ட் கிரிக்கெட் வீரரான எலைன் ஆஷ் தனது 110வது வயதில் காலமானார்.
இவர் (பெண்) 1937 ஆம் ஆண்டில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இங்கிலாந்து அணியில் அறிமுகமானார்.
ஜெர்மனியின் புதியப் பிரதமராக (Chancellor) சமூக ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த ஓலாஃப் ஸ்கோல்ஸ் (Olaf Scholz) பதவியேற்கவுள்ளார்.
ஜெர்மனியின் முதல் பெண் பிரதமரான ஏஞ்சலா மெர்க்கலின் 16 ஆண்டு கால ஆட்சிக்கு ஸ்கோல்ஸ் முடிவைக் கொண்டு வருவார்.
இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மருத்துவர், அனில் மேனன், நாசாவால் அதன் எதிர்கால விண்வெளிப் பணிகளுக்காகத் தேர்ந்தெடுக்கப்பட்ட 10 புதிய விண்வெளி வீரர்களில் ஒருவராவார்.
தென் அமெரிக்காவில், Flatbill flycatchers என்ற ஒரு புதிய பறவை இனம் கண்டுபிடிக்கப் பட்டுள்ளது.
தமிழ்நாட்டின் நகர்ப்புற ஏழைகளுக்கு மலிவு விலையில் வீடு வழங்குவதற்காக இந்தியா மற்றும் ஆசிய வளர்ச்சி வங்கி இரண்டும் இணைந்து 150 மில்லியன் டாலர் மதிப்பிலான ஒரு கடன் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன.