மதிஇறுக்க நோயால் பாதிக்கப்பட்ட பெண் குழந்தையைப் பற்றிய குறும்படமான “ராயா” கேன்ஸ் திரைப்பட விழா 2018-க்கு இந்தியாவிலிருந்து பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இந்த மரியாதையைத் தவிர்த்து, ராயா குறும்படம், தாதா சாகேப் பால்கே திரைப்பட விழாவில் (2018) சிறப்பு விழாக் குறிப்பு விருதினை வென்றிருந்தது.
இந்திய பாட்மின்டன் சங்கத்தின் (Badmintion Association of India - BAI) தலைவரான திரு. ஹரிமந்தா பீஸ்வா சர்மா ஆசிய பாட்மின்டன் கூட்டமைப்பின் துணைத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இவர் தாய்லாந்து நாட்டின் பாங்காக்கில் ஆசிய பாட்மிண்டன் கூட்டமைப்பின் வருடாந்திர பொதுக்கூட்டத்தில் துணைத் தலைவராகத் தேர்வு செய்யப்பட்டார்.
சுவச்சதா சர்வேக்சன் 2018-ன் கீழ் மூன்று லட்சம் முதல் 10 லட்சம் வரையிலான மக்கள் தொகை கொண்ட நகரங்கள் பிரிவில் திடக்கழிவு மேலாண்மையில் இந்தியாவின் சிறந்த நகரமாக மங்களூரு நகரை மத்திய அரசு தேர்ந்தெடுத்துள்ளது.
கர்நாடக ஆளுநர் வஜுபாய் வாலா, விராஜ்பெட் தொகுதியின் பா.ஜ.க. சட்டமன்ற உறுப்பினரான கொம்பரணா கணபதி போபையாவை பெரும்பான்மையை நிரூபிப்பதற்கான முக்கிய வாக்கெடுப்பை (Floor test) தலைமை தாங்கு தாங்கி நடத்துவதற்காக இடைக்கால சபாநாயகராக நியமித்தார்.
இஸ்ரேலில் உள்ள தனது தூதரகத்தை ஜெருசலேமிற்கு மாற்றியமைத்து கவுதமாலா இரண்டாவது நாடாக உருவெடுத்துள்ளது. இந்த நகர்வானது அமெரிக்கா தன்னுடைய தூதரகத்தை ஜெருசலேம் நகரத்தில் திறந்த இரண்டு வார காலத்தில் ஏற்பட்டுள்ளது.
திறனான தடகள வீரர்களுக்கான தேசியப் போட்டிகளின் வரிசையில் உருவாக்கப்பட்ட நாட்டின் முதல் தேசிய பாரா போட்டிகள், கேலோ இந்தியா திட்டத்தின் கீழ் பெங்களூருவில், ஜுன்- ஜூலை மாதங்களில் நடைபெற உள்ளன.
நேபாள பகுதியிலிருந்து உலகின் மிக உயரமான பகுதியான எவரெஸ்ட் சிகரத்தை அளந்த மிக இளம்பெண்ணாக அரியானா மாநிலத்தைச் சேர்ந்த 16 வயது பெண் தமது பெயரை பதிவிட்டுள்ளார்.
மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாறுபாட்டு அமைச்சர் ஹர்ஷ வர்தனால் துவங்கி வைக்கப்பட்ட, சுற்றுச்சூழலை பாதுகாப்பதற்கான மற்றும் நலமான வாழ்தலை ஊக்குவிப்பதற்கான “பசுமைப் பொருள் செயல்பாடுகள்” (Green Good Deeds) எனும் சமூக இயக்கம் உலக சமுதாயத்தால் பெருமளவில் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.
BRICS நாடுகளின் சுற்றுச்சூழல் மீதான அமைச்சரவை தன்னுடைய அதிகாரப்பூர்வ நிகழ்ச்சி நிரலில் “பசுமைப் பொருள் செயல்பாடுகளை” பிரேசிலில் நடைபெறும் அடுத்த அமைச்சரவைக் கூட்டத்திலும், ரஷ்யாவில் நடைபெறும் மற்றொரு கூட்டத்திலும் இணைக்கப் போவதாக அறிவித்துள்ளது.