TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

December 14 , 2021 986 days 615 0
  • ஒரு நாள் போட்டி மற்றும் சர்வதேச T20 கிரிக்கெட் போட்டிகளுக்கான இந்திய அணியின் புதிய தலைவராக ரோஹித் சர்மா நியமிக்கப்பட்டுள்ளார்.
    • இவர் விராட் கோலியை அடுத்து இந்தப் பொறுப்பினை ஏற்கிறார்.
  • 15 மாத நீண்ட காலத்திற்குப் பிறகு, விவசாயிகள் அமைப்பின் தலைவர்கள் தங்களது போராட்டத்தை நிறுத்த முடிவு செய்து 2021 ஆம் ஆண்டு டிசம்பர் 11 அன்று டெல்லியின் எல்லையில் தங்களது போராட்டக் களங்களை விட்டு வெளியேறினர்.
    • ஒன்றிய இந்திய அரசானது குறைந்தபட்ச ஆதரவு விலை மீதான ஒரு குழுவை அமைப்பதாகவும், போராடிய விவசாயிகள் மீதான வழக்குகளை உடனடியாக திரும்பப் பெறுவதாகவும் உறுதியளித்து விவசாயிகளுக்குக் கடிதம் அனுப்பியதைடுத்து  அவர்கள் இந்த முடிவினை மேற்கொண்டனர்.
  • 2020 ஆம் ஆண்டிற்கான மாற்றுத் திறனாளிகளுக்கு அதிகாரமளித்தலுக்கான தேசிய விருதுகளானது சமீபத்தில் வழங்கப்பட்டது.
    • மாற்றுத் திறனாளி நீச்சல் வீரரான முகமது சாம்ஸ் ஆலம் சயக் சிறந்த மாற்றுத் திறனாளி விளையாட்டு வீரருக்கான ஒரு விருதினை வென்றார்.
  • உலகின் முன்னணி வீராங்கனையாஆஸ்திரேலிய நாட்டின் ஆஷ்லே பார்ட்டி (Ashleigh Barty), ஆண்டின் சிறந்த WTA வீரருக்கான விருதினை 2வது முறையாக வென்று உள்ளார்.
    • அமெரிக்காவின் ஓபன் சாம்பியன் எமா ரடுகானு இந்த ஆண்டின் புதுமுகமாக தேர்வு செய்யப்பட்டார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்