TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

December 19 , 2021 981 days 522 0
  • அதானி பசுமை ஆற்றல் லிமிடெட் என்ற நிறுவனமானது 4,667 MW பசுமை ஆற்றலை வழங்குவதற்கு வேண்டி இந்திய சூரிய சக்திக் கழகத்துடன் ஒரு கொள்முதல் ஒப்பந்தத்தை மேற்கொண்டுள்ளது.
    • இது உலகின் மிகப்பெரிய பசுமை மின் ஆற்றல் கொள்முதல் ஒப்பந்தமாகும்.
  • இந்தியாவின் TVS மோட்டார் நிறுவனமானது இந்தியாவிலுள்ள BMW மோட்டார் சைக்கிள் நிறுவனத்துடன் இணைந்து மின்சார வாகனங்களைத் தயாரிக்க உள்ளது.
    • Ola Electric மற்றும் Ather போன்ற புதிய யுகத்தின் புத்தாக்க நிறுவனங்கள் மின்சார வாகனங்களில் தங்களது முதலீட்டை அதிகரித்து வரும் நிலையில் இந்தக் கூட்டணியானது மேற்கொள்ளப் பட்டுள்ளது.
  • புதுடெல்லியிலுள்ள மேஜர் தயான் சந்த் தேசிய மைதானத்தில் நடைபெற உள்ள முதலாவது தேசிய அளவிலான கேலோ இந்தியா மகளிர் ஹாக்கி போட்டியினை ஒன்றிய விளையாட்டுத் துறை அமைச்சர் அனுராக் சிங் தாகூர் அதிகாரப் பூர்வமாக தொடங்கி வைத்தார்.
    • இந்திய விளையாட்டுத் துறை ஆணையம் மற்றும் ஹாக்கி இந்தியா ஆகியவை இணைந்து இந்த முதலாவது தேசிய அளவிலான கேலோ இந்தியா போட்டியினை நடத்துகின்றன.
  • மகாராஷ்டிராவில் மாட்டு வண்டிப் பந்தயத்தினை மீண்டும் தொடங்குவதற்கு உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
    • இந்தப் பந்தயங்கள் 2017 ஆம் ஆண்டு முதல் தடை செய்யப் பட்டிருந்தன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்