TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

December 24 , 2021 976 days 565 0
  • சவுதி அரேபியா தப்லிகி ஜமாத் என்ற அமைப்பிற்குத் தடை விதித்துள்ளது.
    • தப்லிகி ஜமாத் என்பது ஓர் இஸ்லாமிய மதமாற்ற  இயக்கமாகும்.
  • தென் மேற்கு பசிபிக் பெருங்கடலில் உள்ள பிரஞ்சு நாட்டின் ஒரு தீவுப் பிரதேசமான நியூ கலிடோனியோவில் உள்ள வாக்காளர்கள் அத்தீவினைப் பிரான்சு நாட்டின் ஒரு பகுதியாக இணைப்பதற்கு ஆதரவாக வாக்களித்துள்ளனர்.
    • சுதந்திரவாத அமைப்புகளால் புறக்கணிக்கப்பட்ட ஒரு பொது வாக்கெடுப்பில் மேற்கொள்ளப்பட்ட இந்த முடிவானது தென் பசிபிக் பகுதி முழுவதும் பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது.
  • நியூசிலாந்து நாட்டின் சுகாதாரத் துறை அதிகாரிகள் வழங்கிய ஒரு முன்மொழிவில் 14 வயது அல்லது அதற்கு உட்பட்ட சிறுவர்கள் தங்கள் வாழ்நாள் முழுவதும் சிகரெட் வாங்குவதைத் தடை செய்வதற்கான விதிமுறைகள் முன் வைக்கப்பட்டுள்ளன.
    • இந்தச் சட்டமானது 2023 ஆம் ஆண்டு முதல் ஒவ்வோர் ஆண்டும் சிகரெட் வாங்குவதற்கான குறைந்தபட்ச வயதினை உயர்த்தும்.
  • நிகரகுவா நாடானது, சீனாவிற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் தாய்வான் நாட்டுடனான தனது அரசுமுறை உறவுகளை முறித்துக் கொள்கிறது.
    • தாய்வானை தனது நாட்டின் ஒரு நிலப் பகுதியாக மீண்டும் ஒன்றிணைப்பதற்கு வேண்டி சீனா  கோருகிறது.
  • இன்டிகோ விமான நிறுவனமானது டேராடூனிலுள்ள இந்தியப் பெட்ரோலியக் கல்வி நிறுவனத்தின் அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி சபையுடன் ஓர் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.
    • இது உலகளவில் நிலையான விமான எரிபொருளைத் தயாரித்து பயன்படுத்தச் செய்வதற்கானதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்