2020-21 ஆம் நிதி ஆண்டிற்கான பெரிய வங்கிகளின் பட்டியலில் ஒட்டு மொத்த டிஜிட்டல் பரிவர்த்தனைகளில் முதலிடத்தை பாங்க் ஆஃப் பரோடா பெற்றுள்ளது.
டிஜிட்டல் பணவழங்கீட்டுகளுக்கான உத்சவ் கொண்டாட்டத்தின் போது இந்த வங்கிக்கு 2019-20 மற்றும் 2020-21 ஆகிய நிதியாண்டுகளுக்காக டிஜி தான் என்ற விருதுகள் வழங்கப் பட்டுள்ளளன.
வரகுக் கோழி என்ற பறவையின் மிக நீளமான உள்நாட்டு இடம்பெயர்வு வழித் தடமானது இராஜஸ்தான் முதல் மகாராஷ்டிராவின் அகமது நகர் மாவட்டம் வரையில் நீள்வதாக முதல் முறையாக கண்டறியப்பட்டுள்ளது.
வரகுக் கோழியானது கானமயில் இனத்தைச் சேர்ந்த அருகி வரும் இனமாகும்.
O.P. ஜிண்டால் உலகப் பல்கலைக்கழகமானது டைம்ஸ் உயர்கல்வி இதழின் 2021 ஆம் ஆண்டிற்கான ஆசிய விருதுகள் வழங்கும் விழாவில் “ஆண்டின் சிறந்த டிஜிட்டல் புதுமை” என்ற விருதினைப் பெற்றுள்ளது.
இந்த விருதிற்குத் தேர்வான ஒரே இந்தியப் பல்கலைக்கழகம் இதுவாகும்.
கொலம்பியப் பத்திரிகைக் கல்வி நிறுவனமானது தி இந்து குழுமத்தின் தலைவர் மாலினி பார்த்தசாரதி அவர்களை 2022 ஆம் ஆண்டிற்கான தனது முன்னாள் மாணவர் விருதினைப் பெறுபவர்களுள் ஒருவராக அறிவித்துள்ளது.