TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

December 30 , 2021 970 days 522 0
  • வயானா நெட்வொர்க் மற்றும் ஃபெடரல்  வங்கி ஆகியவற்றிற்கு 2021 ஆம் ஆண்டு IBSi – உலக நிதித் தொழில்நுட்பப் புத்தாக்க விருது வழங்கும் விழாவில் ‘மிகவும் செயல் திறன் மிக்க நிதித் தொழில்நுட்பக் கூட்டாண்மை வங்கி : திறன்மிக்கது மற்றும் தகவமைவு மிக்கது’ என்ற விருதானது வழங்கப்பட்டுள்ளது.
    • வழங்கீட்டுத் தொடரமைவு நிதியியலை (Supply Chain Finance) தானியங்கு மயமாக்கி எளிமைப்படுத்தியதற்காக இந்த விருதானது அதற்கு வழங்கப்பட்டுள்ளது.
  • இரண்டு முறை ஒலிம்பிக் பதக்கம் வென்ற இந்தியப் பேட்மிண்டன் வீராங்கனையான P.V. சிந்து பேட்மிண்டன் உலகக் கூட்டமைப்பின் தடகள வீரர்கள் ஆணையத்தின் ஒரு உறுப்பினராக நியமிக்கப்பட்டார்.
    • 2025 ஆம் ஆண்டு வரை இந்த ஆணையத்தின் உறுப்பினராகப் பணியாற்ற உள்ள 5 உறுப்பினர்களுள் ஒருவராக 26 வயதான இந்த முன்னாள் உலக சாம்பியன் நியமிக்கப் பட்டார்.
  • 8வது உலகத் தமிழ் மாநாடு மற்றும் சென்னை உலகப் பொருளாதார  உச்சி மாநாடு டிசம்பர் 27 முதல் 29 வரை சென்னையில் நடத்தப் பட்டது.
    • இதில் உலகம் முழுவதுமிருந்து 10 தலைசிறந்த தமிழர்களுக்கு “உலகத் தமிழர்களின் மணி மகுடம்” என்ற விருது வழங்கப்படவும் உள்ளது.
  • 35 வருட நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஸ்ரீநகரில் உள்ள 126 வருடங்கள் பழமையான புனித லூக் தேவாலயம் மீண்டும் திறக்கப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்