நிதி ஆயோக் மற்றும் ஸுரிச்சைச் (சுவிட்சர்லாந்து) சேர்ந்த தொழில்நுட்ப நிறுவனமான ABB இந்தியா ஆகியவை நோக்க அறிக்கை ஒன்றில் (Statement of Intent - SoI) கையெழுத்திட்டுள்ளன. ரோபோடிக்ஸ், செயற்கை நுண்ணறிவு உள்ளிட்ட மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்பங்களின் ஆற்றலைப் பயன்படுத்தி அதிகளவு பலனைப் பெறுவதில் இந்தியாவிற்கு உதவி புரிவதற்காக SoI கையெழுத்திடப்பட்டுள்ளது.
இந்திய அரசு, நெதர்லாந்து மற்றும் சுவீடன் ஆகியவை HIV/AIDS மீதான முதல் கூட்டிணைவு ஆராய்ச்சித் திட்டத்தைத் தொடங்கியுள்ளன.
மத்திய பாதுகாப்பு அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற பாதுகாப்பு கொள்முதல் கழகக் (Defence Acquisition Council - DAC) கூட்டத்தில் பாதுகாப்பு கொள்முதல் செயல்முறைகளை எளிதாக்குவதற்கான பல்வேறு நடவடிக்கைகளுக்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது.
DAC என்பது இந்திய ஆயுதப்படைகளின் (இராணுவம், கடற்படை மற்றும் விமானப்படை) மூலதனப் பொருட்களின் கொள்முதல் மீது முடிவெடுக்கும் பாதுகாப்பு அமைச்சகத்தின் உயர் அங்கமாகும்.
உலக சுகாதார நிறுவனத்தின் அறிக்கையின்படி, காடுகள் அழிப்பு மற்றும் பருவநிலை மாறுபாடு போன்றவற்றால் ஏற்படுகின்ற விலங்குகளின் இயற்கை வாழ்விட இழப்பு போன்ற மனிதர்களால் ஏற்படுத்தப்பட்ட காரணிகள் கேரளாவில் சமீபத்திய நிபா போன்ற தொற்றுநோய்களின் பரவலுக்கு காரணமாக அமைந்துள்ளன.