TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

January 11 , 2022 957 days 530 0
  • தேசியப் புலனாய்வு முகமையின் 6 புதிய கிளைகளை அமைப்பதற்கு மத்திய அரசு அனுமதியினை வழங்கியுள்ளது.
    • அவை அகமதாபாத், பெங்களூரு, பாட்னா, ஜெய்ப்பூர், போபால் மற்றும் புனேஷ்வர் ஆகிய இடங்களில் அமைக்கப்பட உள்ளன.
  • உலகின் மிக வயதான நபரான ஜப்பானைச் சேர்ந்த கானே தனாகா (Kane Tanaka), 2022 ஆம் ஆண்டு ஜனவரி 02 அன்று தனது 119வது பிறந்த நாளைக் கொண்டாடினார்.
    • 2019 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில், கின்னஸ் உலக சாதனை அமைப்பானது 116 வயதான கானே என்பவரை உலகின் மிக வயதான நபர் என அங்கீகரித்தது.
  • பல்கலைக் கழகங்களின் வேந்தர் பதவியிலிருந்து தான் விலகுவதாக கேரள ஆளுநர் ஆரிஃப் முகமது கான் தெரிவித்தார்.
    • தான் பதவி விலகுவதற்கான முடிவின் பின்னணியில் உள்ள காரணம் உள்புறக் குழப்பங்கள் தான் என அவர் சுட்டிக் காட்டினார்.
  • அசூர் மின் உற்பத்தி நிறுவனமானது ராஜஸ்தானின் பிகானிர் பகுதியில் 600 MW திறன் கொண்ட ஒரு சூரியசக்தி ஆலையை நிறுவியுள்ளதாக அறிவித்தது.
    • இது எந்தவொரு நிறுவனத்தினாலும் இதுவரையில் கட்டமைக்கப்படாத, ஒரே இடத்தில் செயல்படக் கூடிய இந்தியாவின் மிகப்பெரிய சூரியசக்தி ஆலையாகும்.
  • பஹாமா – அமெரிக்க நடிகர் சிட்னி போய்சியர் தனது 94 வது வயதில் காலமானார்.
    • இவர் 1964 ஆம் ஆண்டில் சிறந்த நடிகருக்கான அகாடமி விருதினைப் பெற்ற முதல் ஆப்பிரிக்க அமெரிக்கர் மற்றும் பஹாமா நாட்டினைச் சேர்ந்தவர் ஆவார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்