TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

January 14 , 2022 954 days 545 0
  • சமீபத்தில், அமெரிக்காவில் உள்ள மேரிலாண்ட் மருத்துவமனையின் மருத்துவர்கள், ஒரு பன்றியின் இதயத்தை ஒரு நோயாளிக்குப் பொருத்தினர்.
    • மருத்துவ வரலாற்றில் முதல் முறையாக இது போன்ற உறுப்பு மாற்றுச் சிகிச்சை செய்யப் பட்டது.
  • 2022 ஆம் ஆண்டு முதல் இந்தியன் பிரீமியர் லீக் போட்டிகளின் ஸ்பான்சராக விவோ நிறுவனத்திற்குப் பதிலாக டாடா குழுமம் செயல்படும்.
    • விவோ என்பது சீன நாட்டின் ஒரு கைபேசித் தயாரிப்பு நிறுவனம் ஆகும்.
  • தொலைத்தொடர்புத் துறையானது ஆறாவது தலைமுறை அல்லது 6G என்ற தொழில் நுட்பத்திற்காக வேண்டி ஆறு கல்வித்துறை சார்ந்த பணிக்குழுக்களை தொழில் நுட்பப் புத்தாக்கக் குழுவின் கீழ் உருவாக்கியது.
  • வியட்நாமில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட சில பழங்களில் கொரோனா வைரஸ் தடயங்கள் கண்டறியப்பட்டதை அடுத்து சீனா பல பல்பொருள் அங்காடிகளை மூடி உள்ளது.
    • கொரோனா வைரஸ் மாதிரிகள் டிராகன் பழத்தில் கண்டுபிடிக்கப்பட்டதாக அறிக்கைகள் கூறுகின்றன.
  • மேக்சிமே வச்சியர் லக்ராவே என்பவர், ஜான் கிரிசிஸ்டோஃப்  துடா என்பவரை வீழ்த்தி  உலக பிளிட்ஸ் சதுரங்க சாம்பியன்ஷிப்பினை வென்றார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்